Aadhaar Card Update: ஆதார் அட்டை (Aadhaar Card) என்பது, உங்கள் அடையாளத்திற்காக UIDAI வழங்கிய 12 இலக்க எண்ணாகும். நமது வாழ்க்கையில் ஆதார் என்பது இன்றியமையாததாகி விட்டது. அது இல்லாமல், வங்கி கணக்கு தொடங்குவது முதல், எந்த ஒரு வேலைக்கும் ஆதார் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம் பெரும்பாலும் ஆதார் எடுக்கப்பட்ட சமயத்தில் எடுத்ததாக இருக்கும். அதற்கு இப்போது இருக்கும் தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாததாக இருக்கலாம். அல்ல்து புகைப்படம் தெளிவில்லாததாக இருக்கலாம். அல்லது உங்களுக்கு பிடிக்காத வகையில் இருக்கலாம். அதனால், பல பேருக்கு, ஆதாரில் உள்ள புகைப்படத்தை, அதாவது போட்டோவை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று எண்ணம் இருக்கும். அது மிகவும் எளிதான் காரியம் தான்.
ஆதார் அட்டையில் (Aadhaar card) தனிநபரின் பெயர், முகவரி, போன்ற விபரங்களை ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்யலாம். ஆனால் மொபைல் எண், புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்று தான் மாற்ற முடியும்.
1. UIDAI இணையதளமான https://uidai.gov.in/ என்ற வலைதளத்திற்கு சென்று, ஆதார் விபரங்களை அப்டேட் செய்வதற்கான படிவதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. நிரப்பிய படிவத்தை அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையம் (Aadhaar Enrolment Center) அல்லது ஆதார் சேவா மையத்திற்கு சென்று சமர்ப்பித்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும்.
3. அங்குள்ள நிர்வாகி உங்களை புகைப்படம் எடுப்பார்.
ALSO READ | Ration Card: நீக்கப்பட்ட பெயரை சேர்ப்பது எப்படி ..!!
4. பின்னர் புதிய புகைப்படத்தை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிப்பார்கள். இதற்காக ரூ .25 + ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்
5. தகவல் புதுப்பிப்பு கோரிக்கை எண் (Update Request Number-URN) கொண்ட ஒப்புதல் சீட்டு (Acknowledgement) உங்களுக்கு வழங்கப்படும்
6. புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதா என்பதை URN எண்ணை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஆதார் சேவா மையத்திற்கு செல்லாமலேயே புதுப்பிக்க விரும்பினால், கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும்:
1. முதலில், நீங்கள் UIDAI என்னும் ஆதாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
2. ஆதார் அட்டை தகவல்களை புதுப்பிப்பு திருத்தும் படிவத்தை அங்கிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3. பின்னர் அனைத்து தகவல்களும் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.
4. படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஆதார் அட்டை தகவல்களைபுதுப்பிப்புக்காக UIDAI பிராந்திய அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதில், சுய சான்றளிக்கப்பட்ட படத்தை இணைத்து அனுப்ப வேண்டும்
5. இது நடந்த இரண்டு வாரங்களுக்குள் புதிய புகைப்படங்களுடன் ஆதார் அட்டை உங்களுக்கு கிடைக்கும்.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR