நாய் நடந்து செல்பவர்களை மோப்பம் பிடிப்பது ஏன்? இப்படியொரு காரணம் இருக்கு

Dog sniffing : சாலையில் நீங்கள் நடந்து செல்லும்போது திடீரென நாய் உங்கள் அருகில் ஓடிவந்து மோப்பம் பிடிக்கும். இது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2024, 12:51 PM IST
  • நாய் நடப்பவர்களை மோப்பம் பிடிப்பது ஏன்?
  • அடிப்படையான இந்த 5 காரணங்கள் தான்
  • அடையாளம் கண்டு கொள்ள மோப்பம் பிடிக்கும்
நாய் நடந்து செல்பவர்களை மோப்பம் பிடிப்பது ஏன்? இப்படியொரு காரணம் இருக்கு title=

Dog sniffing Reasons Tamil : சாலையில் நடந்து செல்லும்போது திடீரென நாய் ஓடி வந்து உங்களை மோப்பம் பிடிப்பதை பலமுறை பார்த்திருப்பீர்கள். அதிக தெரு நாய்கள் இருக்கும் இடத்தில் இப்படியான அனுபவங்களை சிலர் அடிக்கடி எதிர்கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்போது நாய் கடிக்குமோ என்று பயந்தும் இருப்பீர்கள். ஏனென்றால் நடந்து செல்லும்போது திடீரென நாய் உங்கள் அருகில் ஓடிவந்தால் இப்படி நினைப்பது இயல்பான ஒன்று தான். நாய் அருகில் ஓடி வரும்போது அமைதியாக இருந்தால் அது மோப்பம் பிடித்துவிட்டு செல்லும். அது கடிக்க வருகிறதோ என நினைத்து நீங்கள் முன்கூட்டியே பதட்டப்பட்டு துரத்திகூட விட்டிருப்பீர்கள். அப்போது சில நாய்கள் ஓடிவிடும், சில நாய்கள் கோபம் கொண்டு கடிக்ககூட வரும். 

இது ஒருபுறம் இருந்தாலும் மனிதர்கள் நடந்து செல்லும்போது திடீரென ஓடி வந்து மோப்பம் பிடிப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம். நாய்க்கு மோப்ப சக்தி அதிகம். மனிதர்களை விட அதிக மோப்ப சக்தியை கொண்டிருக்கும் நாய் மூக்கில் அதிக வாசனை செல்கள் இருக்கின்றன. மனிதர்களாகிய நம்மிடம் 6 மில்லியன் வாசனை செல்கள் மூக்கில் இருக்கிறது என்றால் நாயிடம் சுமார் 100 முதல் 300 மில்லியன் வாசனை செல்கள் இருக்கின்றன. அதனால், மனிதர்களை பார்த்ததும் பல காரணங்களுக்காக நாய் அருகில் வந்து மோப்பம் பிடிக்கிறது. 

மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா?

1. முதல் காரணம், நாய்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதற்காக மோப்பம் பிடிக்கும். நாய்கள் பேச முடியாது என்பதால் மோப்ப சக்தியை வைத்து மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும். இதற்காகவே நாய்களிடம் பெரோமோன்கள் ஹார்மோன்கள் இருக்கின்றன. இதனை வைத்து ஒருவரின் அடையாளம், உணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நாய்கள் தெரிந்து கொள்ளும். 

2. மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டுமின்றி தங்களின் நன்றியை சொல்வதற்கும் நாய்கள் மோப்பம் பிடிக்கும், ஒருவரின் மீதான அன்பை வெளிக்காட்டவும் முகர்ந்து பார்க்கும். 

3. நாய்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு என்பதால் ஒவ்வொரு முறையும் மனிதர்கள் சென்று வரும்போதெல்லாம் அவர்களை ஆராய்ந்து கொள்ளும். மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் வாசனையை முகர்ந்து கொள்ளும்

4. இதுதவிர நாய்கள் சோர்வாக இருக்கும்போதுகூட தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மனிதர்களிடம் வந்து வேகமாக மோப்பம் பிடிக்கும். இப்படியான அணுகுமுறை அதற்கு சாந்தத்தை கொடுக்கும். 

5. ராணுவம் மற்றும் போலீஸில் இருக்கும் நாய்களுக்கு பிரத்யேகமாக மோப்ப பயிற்சி கொடுக்கப்படும். இது குற்றவாளிகளை அடையாளம் காணவும், ஆபத்தான பொருட்கள் இருக்கும் இடத்தை கண்டறியவும் உதவும்.

நாய்கள் மோப்பம் பிடிப்பதற்கு இவை மட்டுமே காரணங்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு நாய்க்கும் ஒவ்வொரு வகையான குணாதிசயம் இருக்கும். அதனடிப்படையில் நாய்கள் மோப்பம் பிடிக்க வேறு சில காரணங்களும் இருக்கலாம். பாதுகாப்பை பொறுத்தவரை நாய்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News