கொரோனா வைரஸ் ஈக்கள் வழியாக பரவுகிறது என்ற வதந்திக்கு உலக சுகாதார அமைப்பின் பதி என்ன..?
தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸை விட மிகக் கொடுமையானது, அது தொடர்பாக வலம் வரும் போலி செய்திகள் தான். அப்படி பரவி வரும் செய்திகளில் ஒன்று தான் 10 வினாடி சுவாசத்தை நிறுத்தி வைக்கும் சோதனை. இதையடுத்து, வெப்பமான இடத்தில் கொரோனா வைரஸ் பரவாது என்ற மற்றொரு செய்தி.... இதுவரை கிடைத்த சான்றுகளிலிருந்து, COVID-19 வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை உள்ள பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. காலநிலையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் அல்லது COVID-19-யை புகாரளிக்கும் பகுதிக்குச் செல்லுங்கள்.
COVID-19-க்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதாகும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் கைகளில் இருக்கும் வைரஸ்களை அகற்றி, உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதன் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோயைத் தவிர்க்கவும்" இது தான் உண்மை.
இந்நிலையில், கொரோனா வைரஸ் ஈக்கள் வழியாக பரவுகிறது என்ற வதந்திக்கு உலக சுகாதார அமைப்பு இதற்கான உண்மையை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஈக்கள் வழியாக பரவுகிறதா என WHO கூறுகையில்... “இன்றுவரை, COVID-19 வைரஸ் ஹவுஸ்ஃபிளைஸ் (ஈக்கள்) வழியாக பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் தகவலும் இல்லை. COVID-19-யை ஏற்படுத்தும் வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது உருவாகும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
FACT: #COVID19 IS NOT transmitted through houseflies#coronavirus #KnowTheFacts pic.twitter.com/2SxM7Voofv
— World Health Organization (WHO) (@WHO) April 5, 2020
சமீபத்தில், உங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு குறைந்தபட்சம் 10 வினாடிகள் மூச்சை அப்படியே நிறுத்தி வைத்து பார்க்க வேண்டுமாம். உங்களால் 10 விநாடிகள் மூச்சை நிறுத்தி வைக்க முடியும், அதுவும் இருமலோ அல்லது கஷ்டம் இல்லாமல் இதை செய்யமுடியும் என்றால் உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வரவில்லை என்று அர்த்தம் என்ற வதந்தி பொய்யானது எனவும் அது தெரிவித்துள்ளது.