குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!

பெற்றோர்கள் பலர், தங்களது குழந்தைகளிடம் சிறுவயதிலேயே போனை கொடுத்து விடுவர். ஆனால், குழந்தைகளிடம் எந்த வயதில் போன் கொடுக்க வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 28, 2024, 12:02 PM IST
  • குழந்தைகளிடம் போன் கொடுப்பது..
  • எந்த வயது அதற்கு சரி?
  • பெற்றோர்களுக்கு டிப்ஸ்
குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்! title=

தற்போதைய நவீன உலகத்தில் அனைவரது கையிலும் செல்போன் தவழ்கிறது. இந்த சின்ன பொருளுக்குள் எத்தனையோ எண்ணிலடங்கா விஷயங்கள் அடங்கி கிடக்கின்றன. இதனால் நமக்கு தேவையான செய்திகள் நம்மை சேர்வதுடன் தேவையற்ற பல விஷயங்களும் கூட நம் மூளைக்குள் புகுத்தப்படுகிறது. பெரியவர்களுக்கே இந்த நிலை எனும்போது குழந்தைகள் கையில் செல்போனை கொடுத்தால் என்ன ஆகும்? பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு பிறகு தான் மூளை வளர்ச்சியும் சரி மனவளர்ச்சியும் சரி நடைபெறும். சிறுவயதிலேயே அவர்கள் பல விஷயங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டால் பின்னர் அவர்கள் வளர்ச்சியிலும் அது பாதிப்பை ஏற்படுத்தலாம். 

குழந்தை வளர்ச்சி: 

சாதாரணமாகவே குழந்தைகள் அவர்களுக்கு ஏற்ற முறையில் தான் வளர்வர். டீன் ஏஜ் வயதிற்கு செல்பவர்கள் ஒரு மாதிரியும், பேசப் பழகி இப்போது தான் பள்ளிக்கு செல்லும் குழந்தை ஒரு மாதிரியும் வளரும். இவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு ஊடகம் தான் செல்போன். இருவரும் ஒரே மாதிரியான விஷயங்களை இதன் மூலம் அறிந்து கொள்வதால் இவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். சமீப காலமாக பலர் தங்கள் குழந்தைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களே ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காகவும் செல்போனை கையில் கொடுக்கின்றனர். இது அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் கையில் எந்த வயதில் செல்போன் கொடுக்க வேண்டும்? 

கொரோனா காலத்துக்கு பிறகு குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகமாகிவிட்டது. காரணம், ஆன்லைன் கிளாஸ், ஆன்லைனில் அசைன்மென்ட், ஆன்லைனிலேயே நண்பர்களுடன் உரையாடல் என்றாகிவிட்டது. போதா குறைக்கு, இரண்டு ஆண்டுகள் அவர்கள் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் செல்போனை தவிர அவர்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாமல் ஆகிவிட்டது. இதனால் பல குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப வரும்போது நேரில் பிறருடன் உரையாடுவதையே கடினமாக பார்த்தனர். 

மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..!

இது குறித்து பேசும் குழந்தைகள் நல மருத்துவர்கள், 11 முதல் 14 வயது வரை இருக்கும் குழந்தைகள் கையில் பெற்றோர்கள் கண்காணிப்புடன் செல்போன் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். காரணம், இந்த வயதில் இருக்கும் குழந்தைகள் பலர் புத்தகத்தை தாண்டி பல விஷயங்களை இணையத்தில் படிக்க வேண்டி இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் தங்களின் கண்காணிப்புக்கு கீழே இவர்களிடம் செல்போன் கொடுக்கலாம். இருப்பினும் அதீத செல்போன் பயன்பாட்டினை ஊக்குவிக்கக் கூடாது என்பது அவர்களின் கருத்தாகும்.  

விதிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்: 

>குழந்தைகள் தன் கையில் இருக்கும் செல்போனை சரியாக உபயோகித்தால் அவர்களிடம் செல்போன் கொடுக்கலாம். கேம் விளையாட அனுமதித்தாலும் ஸ்கிரீன் டைமை தாண்டி அவர்கள் உபயோகித்தால் செல்போன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். 

>செல்போனை தாண்டி தனது வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களிலும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

>வீட்டில் இருக்கும் பிற வேலைகளையும் பொறுப்புடன் செய்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். தன்னிடம் கொடுக்கப்படும் செல்போனை வைத்து எந்தவித அதிர்வு செயலிலும் அவர்கள் ஈடுபடாமல் இருந்தால் அவர்களை நம்பி போனை கொடுக்கலாம்.

>நீங்கள் விதிக்கும் விதிமுறைகளுக்கு அவர்கள் கீழ்படிந்தால் மட்டும் போனை கொடுக்கவும். 

மேலும் படிக்க | Parenting Tips: உங்கள் குழந்தைகளை அறிவாளியாக மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News