No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

What Is No Nut November : நவம்பர் மாதம் வந்தாலே No Nut November என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விடுவர். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Nov 3, 2024, 04:45 PM IST
  • No Nut November என்றால் என்ன?
  • இது பிரபலமானது எப்படி?
  • இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?
No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?  title=

What Is No Nut November : நவம்பர் மாதம், பல விஷயங்களுக்கு பிரபலமானது. கார்த்திகை தீபம், தீபாவளி வரூம் மாதம், மழைக்காலம் ஆரம்பிக்கும் மாதம், இறுதி மாதத்திற்கு முன்னர் இருக்கும் மாதம் என இந்த மாதத்தில் பல்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இந்த மாதம் ஆரம்பிக்கும் முதல் தேதியிலேயே இணையதளங்களில் No Nut November என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக ஆரம்பித்து விடும். இதற்கு அர்த்தம் என்ன? இது ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

No Nut November:

No Nut November-ஐ NNN என்று குறிப்பிடுவர். இது, ஒரு இணையதள சவால் ஆகும். இது, குறிப்பாக ஆண்களுக்காக வைக்கப்படும் சவால். நவம்பர் மாதத்தில், எந்த வித பாலியல் தொடர்பான விஷயங்களையும் இதில் கலந்து கொள்பவர்கள் செய்யக்கூடாது என்பதுதான் இதன் நோக்கம். Nut என்பதை, இணையதள மொழியில், விந்து வெளியேறுதல் (ejaculation) என்று அர்த்தம். இது, ஆரம்பத்தில் நகைப்பூட்டும் விஷயமாகத்தான் பார்க்கப்பட்டது. இப்போதும் சிலர் அப்படித்தான் பார்த்து வருகின்றனர். ஆனால், இதை சிலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு செய்கின்றனர். இதை இப்போது சிலர், சுயக்கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் விஷயமாகவும், நல்ல சமூக பரிசோதனையாகவும் பார்க்கின்றனர். 

வரலாறு:

2010ஆம் ஆண்டு, அல்லது அந்த சமயத்தில் விளையாட்டாக reddit தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஷயம்தான், இந்த No Nut November. அந்த தளத்தில் சிலர், மது, மாது ஆகிய விஷயங்களிடம் இருந்து தள்ளி இருப்பது குறித்து பேச ஆரம்பித்தனர். இந்த விணையதள விவாதத்தில் பங்கேற்றவர்கள், பாலியல் மற்றும் மதுவிடம் இருந்து தள்ளியிருப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து பேச ஆரம்பித்தனர். இதை சிலர் சவாலாக எடுத்துக்கொண்டு நவம்பர் மாதத்தில் புகைப்பிடிக்க கூடாது, பாலியல் உறவு கொள்ளக்கூடாது, சுய இன்பம் அடையக்கூடாது என்று தங்களுக்குள்ளேயே கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு அதை பின்தொடர ஆரம்பித்தனர். இதனாலேயே, வருடா வருடம் நவம்பர் மாதம் வரும் போது, இதனை பலர் பின்பற்றி வருகின்றனர். எக்ஸ் தளம் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இது குறித்து பரவலாக பேசியும் வருகின்றனர். 

இதனால் ஏற்படும் பயன்கள் என்ன? 

No Nut November சவாலை பின்பற்றுபவர்கள், தங்களுக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்பதை சில இடங்களில் கூறியிருக்கின்றனர். அவை குறித்து இங்கு பார்ப்போம். 

சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு:

இந்த சவாலில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்குள் சுய ஒழுக்கம் அதிகரித்ததாகவும், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் கூறியிருக்கின்றனர். 

மேலும் படிக்க | உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த வித்யா பாலன்! என்ன செய்தார் தெரியுமா?

மனத்தெளிவு மற்றும் கவனம்:

ஒரு சிலர், தாங்கள் இந்த மாதத்தில் ஆபாசப்படம் பார்க்காததாலும், பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாததாலும் மனத்தெளிவு பிறந்ததாக கூறியிருக்கின்றனர். மேலும், செய்யும் விஷயங்களில் கவனம் அதிகரித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். 

இவர்கள் பலனடைந்ததாக கூறியிருக்கும் விஷயங்களை உண்மை எனக்கூற எந்தவிதமான அறிவியல் சாட்சிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள்:

ஒரு சிலர், இந்த சவால் மீது கடுமையான விமர்சனங்களையும் வைக்கின்றனர். அவை குறித்து இங்கு பார்ப்போம். 

அவமான உணர்வு:

ஒரு சிலர், பாலியல் உணர்வு இருப்பவர்களுக்கு அந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவமானம் ஏற்படும் வகையில் இந்த  சவால் இருப்பதாக கூறி வருகின்றனர். 

யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்:

ஒரு சிலர், இந்த விஷயம் சாத்தியமே இல்லாதது என்றும், இதை பிறரிடம் இருந்து எதிர்பார்ப்பது சரியில்லை என்றும் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு வீட்டில் ஏற்படும் 8 பிரச்சனைகள்!! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News