வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

கறிவேப்பிலையை தினசரி சாப்பிட்டு வந்தால் செரிமானம், முடி வளர்ச்சி, சரும ஆரோக்கியம் என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2024, 07:03 PM IST
  • கறிவேப்பிலையில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
  • ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.
  • உடலில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? title=

கறிவேப்பிலை இந்திய உணவுகளில் முதன்மையாக சேர்க்கப்படுகிறது. இவற்றின் நறுமண சுவைக்காகவும், அதில் உள்ள சத்துக்களுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்படி தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இந்த பழக்கம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்படுகிறது. தற்போதும் பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி கருப்பாக மாறும் என்று  கூறப்படுகிறது.இருப்பினும் இதனை தாண்டி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!

செரிமானத்திற்கு உதவுகிறது

கறிவேப்பிலை செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்துகள் உணவு செரிமானம் ஆக வேலை செய்கிறது. இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகி, மலச்சிக்கலை குறைக்கிறது. மேலும் செரிமான கோளாறுகளை சரி செய்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் நல்ல செரிமானம் அடைந்தாலே எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.

இதய ஆரோக்கியம்

கறிவேப்பிலை இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். கறிவேப்பிலை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள நச்சு நீக்கும் பண்புகள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. இதன் மூலம் உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது.

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும், தேவையற்ற கொழுப்புகளையும் வெளியேற்ற கறிவேப்பிலை உதவுகின்றன. இவை உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதால் உடல் எடை குறைகிறது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுவதால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் சாப்பிடும் உணவின் அளவு கம்மியாகி உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

கண் ஆரோக்கியம்

கறிவேப்பிலையில் அதிகளவு வைட்டமின் ஏ உள்ளது. இவை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் கறிவேப்பிலையை தினசரி சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்புரை, கண் பார்வை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது.

முடி மற்றும் தோல் ஆரோக்கியம்

கறிவேப்பிலை முடி மற்றும் சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின்கள் பி, சி போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி கருப்பாகி, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. மேலும், முகப்பரு, தழும்புகள் போன்ற தோல் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

இரத்த சர்க்கரை

கறிவேப்பிலையில் உள்ள முக்கியமான பண்புகளில் ஒன்று இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

கறிவேப்பிலையை எப்படி சாப்பிடலாம்?

கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் அப்படியே மென்று சாப்பிடலாம். இல்லை என்றால், பேஸ்டாக அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். மேலும் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். தினசரி காலையில் வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.

மேலும் படிக்க | கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News