நாளை சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்

கிரகத்தின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 10:28 AM IST
  • சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி
  • வருமானத்தில் அதிகரிப்பு பெறலாம்
  • கூட்டுப் பணிகளில் வெற்றி கிடைக்கும்
நாளை சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் title=

வேத பஞ்சாங்கத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றுகிறது. கிரகத்தின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு கிரக மாற்றம் அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் அமையும். மகிழ்ச்சி மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரன், மார்ச் 31 ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகயுள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியின் பலன் காரணமாக பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்-

மேஷம்- சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானமாக கருதப்படும் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகுகிறார். அத்தகைய சூழ்நிலையில், வருமானத்தில் அதிகரிப்பு பெறலாம். வாகனம் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் லாபம் பெறலாம். வியாபாரிகள் லாபம் அடையலாம். கூட்டுப் பணிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும் 

மகரம் - மகர ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பார். இது செல்வம், குடும்பம் மற்றும் பேச்சு இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். இந்த நேரத்தில் புதிய வணிக உறவுகள் நிறுவப்படும். மகர ராசியை ஆளும் கிரகம் சனி. சனி, சுக்கிரன் நட்பு உணர்வால் சுக்கிரன் ராசி மாற்றத்தின் முழு பலனைப் பெறுவீர்கள்.

கும்பம்- சுக்கிரன் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். உங்கள் கேந்திரம் மற்றும் திரிகோணத்தின் அதிபதி சுக்கிரன். இது மகிழ்ச்சி (ஒன்பதாவது வீடு) என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் சொத்து வியாபாரிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையுடன் தொடர்புடையவர்கள் பயனடைவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News