வேலன்டைன் நாள் ( காதலர் தினம் ) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
காதலர் தினம் எப்படி வந்தது?
ரோமில் கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, ராணுவத்தில் சேர இளைஞர்கள் தயங்கியதால் ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு உத்தரவை போட்டான். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள் என்ற அந்த ஆணை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் ராணுவத்தில் இளைஞர்கள் வேருவார்கள் என மன்னன் நினைத்துள்ளான்.
இந்நிலையில் பாதிரியார் வாலண்டைன் என்பவர் மன்னனின் இந்த அறிவிப்பை மீறி ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதையறிந்த மன்னன் பாதிரியார் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார். இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி. வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது.