கங்கனா ரனவுத் 'soft porn star' என்று கூறியதை நிராகரித்த உர்மிளா மாடோண்ட்கர் அவக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.கங்கனா ரனவுத் உடன் வார்த்தைப் போரில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று உர்மிளா மாடோண்ட்கர் கூறுகிறார்.
பிரபல நடிகை நடிகை உர்மிளா மாடோண்ட்கர் , அதிகாரப்பூர்வமாக சிவசேனா கட்சியில் இணைந்தார். IANS செய்தியின் நிருபரிடம் பேசிய ஊர்மிளா கங்கனா பற்றி இவ்வாறு தெரிவித்தார்.
சிவசேனாவின் பெண்கள் பிரிவு வலுவானது என்றும், அவர் அந்த பிரிவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஊர்மிளா தெரிவித்தார்.
ஊர்மிளா பாலிவுட்டில் மட்டுமல்ல, பல பிராந்திய மொழிகளிலும் நடித்து நாடு முழுவதும் பிரபலமானவர். கமலஹாசனின் (Kamalhassan) இந்தியன் திரைப்படத்தில் ஊர்மிளா மாடோண்ட்கரும் நடித்துள்ளார்.
உர்மிளாவை "மென்மையான ஆபாச நட்சத்திரம்" ('soft porn star') என்று கங்கனா விமர்சித்திருந்தார். ஆனால் கங்கனாவின் கருத்து தன்னையோ, தனது அரசியல் வாழ்க்கையையோ எந்த விதத்திலும் பாதிக்காது என்று உர்மிளா மாடோண்ட்கர் (Urmila Matondkar) கூறுகிறார்.
Also Read | ‘தலைவி’ பட shooting மீண்டும் துவக்கம்: மகிழ்ச்சியில் படங்களை share செய்த Kangana
"நான் கங்கனாவுடன் எந்தவொரு வார்த்தைப் போரிலும் ஈடுபட மாட்டேன், நான் கங்கனாவின் ரசிகையும் கிடையாது. உண்மையில் நாம் அனைவரும் அவரைப் பற்றி தேவைக்கு அதிகம் பேசியிருக்கிறோம் என்றெ நினைக்கிறேன். எனவே இதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், நம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு சுதந்திரத்திற்கு உரிமை உண்டு, எனவே அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ, என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை செய்யட்டும்"என்று ர்மிளா கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி சேனல் ஒன்றிடம் கங்கனா பேசும்போது, உர்மிளா அளித்த பேட்டி ஒன்றுக்கு பதிலளித்தார். அப்போதுதான் கங்கனா ரனவுத் (Kangana Ranaut) சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். அந்த நேர்காணலில், பாலிவுட்டின் (Bollywood) 'போதை மருந்து-மாஃபியா' தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. நேர்காணலுக்கு பதிலளித்த கங்கனா, உர்மிளா தனது போராட்டங்களை "கேலி செய்கிறார்" என்று கூறினார். அதோடு, ஊர்மிளா "மென்மையான ஆபாச நட்சத்திரம்" ('Soft porn star') என்றும் கங்கனா கூறியிருந்தார்.
உர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தவுடன், கட்சி அவரை மகாராஷ்டிரா (Maharashtra) சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.சி) பரிந்துரைத்துள்ளது.
Also Read | நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு மற்றும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR