இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. ஒருபக்கம் கொரோனா வைரஸ் பயம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பல நகைச்சுவையான சம்பவம் நடை பெறுகிறது. இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன், இந்த பெயரை அவரது மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் சூட்டியுள்ளார்.
கொரோனா இந்த பிரச்சினையில் உலகை ஒன்றிணைத்துள்ளதால், கொடிய வைரஸுக்கு குழந்தைக்கு பெயரிட முடிவு செய்ததாக மாமா, நிதேஷ் திரிபாதி கூறினார். சோஹ்கௌரா கிராமத்தில் பிறந்த குழந்தை, ஏற்கனவே ஊரின் பேச்சாகிவிட்டது. ஆனால், மக்களிடையே இது சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்த்து உலக மக்களை ஒன்றாக இணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவராக இக்குழந்தை இருப்பார்' என்றார்.
"வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை, இது உலகில் பல மக்களைக் கொன்றது, ஆனால் இது நம்மில் பல நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு உலகை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. இந்த குழந்தை தீமைக்கு எதிராக போராடுவதற்கான மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்," கூறினார்.