தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சா... அனல் பறக்கும் முன்பதிவு!

Diwali Train Ticket Booking: வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பயணத்திற்கான முன்பதிவுகளை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கியது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 12, 2023, 08:52 AM IST
  • தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.
  • இன்றைய டிக்கெட் முன்பதிவு அனல் பறந்தது.
  • ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் டிக்கெட் எடுக்கலாம்.
தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சா... அனல் பறக்கும் முன்பதிவு! title=

Diwali Train Ticket Booking: தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட சென்னை, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் பெருவாரியாக தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாகும். பண்டிகை தினங்களில் சென்னை முழுவதுமாக காலியாக இருப்பதை கொண்டே, வெளியூர் செல்லும் கூட்டத்தின் அளவை ஒருவர் கணக்கிட்டு கொள்ளலாம். 

சமூக வலைதளங்கள் முதல் டீ கடை வரை சென்னை புறநகர் பகுதியில் பண்டிகை காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி குறித்த பேச்சுகள் தான் நிறைந்திருக்கும். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களுக்கு பயண நேரமே 10 மணிநேரத்திற்கும் மேலாக இருக்கும் சூழலில், சென்னை புறநகர் பகுதியின் போக்குவரத்து நெருக்கடியில் மட்டும் சுமார் 2-3 மணிநேரம் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக இருந்தது. 

இருப்பினும், அதனை தடுக்க பல சிறப்பு பேருந்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை விரைவில் தமிழ்நாடு அரசு திறக்க உள்ள நிலையில், இந்த சூழல் மாற்றமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், மக்கள் பேருந்துகளை விட ரயில்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்கு பின் தீபாவளிக்கே தங்களின் சுற்றுப்பயணத்தை பலரும் திட்டமிட்டுக்கொள்கின்றனர். அதற்கு ஏற்ப ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவும் செய்துகொள்கின்றனர்.

மேலும் படிக்க | பயணிகளின் கவனத்திற்கு.. இந்த ரயில்வே எண்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கா

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பயணத்திற்கான முன்பதிவுகளை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கியது. தீபாவளி பயணத்திற்கான ரயில் டிக்கெட்டுகளை வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. 

தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட் வழங்கும் பணி இன்று (ஜூன் 12) முதல் தொடங்கியது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் ஆகியவை இன்று காலை 8 மணி முதலே டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. பல ரயில்களின் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் வாங்கலாம்.

நவம்பர் 9 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும் முன்பதிவு செய்தனர். நவம்பர் 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு நாளை (ஜூன் 13) மேற்கொள்ளலாம். அதேபோல், நவம்பர் 11ஆம் தேதிக்கான முன்பதிவுகளை ஜூன் 14ஆம் தேதியும், நவம்பர் 12ஆம் தேதிக்கான முன்பதிவை ஜூன் 15ஆம் தேதியும் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், வியாழக்கிழமை (நவம்பர் 9) முதல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நிமிட குழப்பத்தைத் தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம். தேவையைப் பொறுத்து, தீபாவளி சிறப்பு ரயில்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு... ஆஹா அசத்தல் அறிவிப்பு - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News