Tips For Selling Used Car: நீங்கள் பயன்படுத்திய காரை விற்க விரும்பினால், கார் எவ்வளவுக்கு விற்க முடியும்? என்ற கேள்வி நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும். அதேநேரத்தில் இந்த விலைக்கு காரை விற்பனையானால் மகிழ்ச்சி என்ற ஆசையும் இருக்கும். இப்படியான சூழலில் நீங்கள் பயன்படுத்திய காரை அதிக தொகைக்கு விற்பனை செய்ய விரும்பினால், சில அடிப்படையான டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
சுத்தம்
உங்கள் காரைப் பார்க்க வாடிக்கையாளர் வர இருந்தால், அவர் வருவதற்கு முன் காரைக் கழுவி விடுங்கள். அந்த வாடிக்கையாளர் காரைப் பார்க்கும்போது, கார் சுத்தமாக இருந்தால் உடனே பிடித்துப்போக வாய்ப்புகள் உள்ளன. மேலும், கார் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் உருவாகும்.
கலர் மாற்றம்
உங்கள் காரின் நிறம் மங்கினால், விற்கத் தயாராவதற்கு முன், உங்கள் காரின் பெயிண்ட் மீண்டும் ஜொலிக்கத் தொடங்கும் வகையில் புதியதாக மாற்றிக் கொள்ளவும். இது வாடிக்கையாளருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும். காரும் புத்தம் புது கார் என்ற எண்ணமும் வாடிக்கையாளர் மனதில் ஏற்படும்.
காரின் உட்புறம்
காரின் உட்புறம் நன்றாக இல்லை என்றால், அதில் அமர்ந்திருப்பவருக்கும் அந்த உணர்வு பிடிக்காது. எனவே, உட்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
மேலே உள்ள அனைத்து விஷயங்களும் முக்கியமானவை, ஏனென்றால் நீங்கள் நல்ல மற்றும் அழகான ஒன்றைப் பார்க்கும்போது அதன் மீது நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். காரை விற்கத் தயாராகும் போது நீங்கள் சுத்தமாக வைத்திருத்தல், நிறத்தை மாற்றுதல் மற்றும் உட்புறத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்ய வேண்டியது அவசியம்.
சரியான விலை
இது தவிர, வாடிக்கையாளரிடம் காருக்கு நீங்கள் திட்டமிட்டுள்ள விலையை விட சற்றே அதிக விலையைக் கேளுங்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் விலையை பேச்சுவார்த்தையில் பெறலாம்.
சரியான ஆவணங்கள்
ஆவணங்கள் சரியாக இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் விலையை பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை ஆவணங்கள் சரியாக இல்லை என்றால், அதனை காரணம்காட்டி வாடிக்கையாளர் விலையைக் குறைக்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ