சேமிப்பு என்பது நல்ல விஷயம் என்றாலும், எந்த திட்டத்தில் சேமிக்கிறோம்? அந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்ன?, நம்முடைய இலக்கு என்ன? போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. பங்குச்சந்தை, போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் சேமிப்பதற்கு ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், எதற்காக சேமிக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்து அந்த திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
உதாரணமாக, பெண் குழந்தைகளுக்காக சேமிக்கிறீர்கள் என்றால் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் சிறந்தது. ஆனால், அதனை பெண் குழந்தைகளுக்காக அல்லாமல் நீண்டகால முதலீட்டுக்கான திட்டமாக நீங்கள் பார்த்தால், அது உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்றால் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை நீண்டகால முதலீட்டுக்கான திட்டமாக பார்த்தால், அதில் பயனில்லை என்றே கூறுகின்றனர். எதற்காக அப்படி கூறுகிறார்கள்? என்பதை பார்க்கலாம்.
ALSO READ | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: 1 ஜனவரி முதல் மாறுகிறது முக்கிய விதி
செல்வ மகள் திட்டம்
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi yojana) எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தில் சேமிக்கலாம். ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிக்க முடியும்.
வங்கிகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களைவிட, இந்த திட்டத்துக்கு கூடுதலான வட்டி கொடுக்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்து நீண்டகால முதலீடு மீது ஆர்வம் கொண்டவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
செல்வமகள் சேமிப்புக்கான வட்டி
இந்த திட்டத்தில் சேமிக்கும் பணத்திற்கு 7.6 விழுக்காடு வட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், மூத்த குடிமக்கள் திட்டத்தில் 7.4 விழுக்காடு வட்டியும், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் 7.1 விழுகாடு வட்டியும் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இதனால், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்து வந்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு 5.09 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த சேமிப்புக்கு வருமானவரி விலக்கும் உண்டு. ஆனால்...
ALSO READ | ALSO READ | Bank Facility: வங்கிக் கணக்கில் பணமே இல்லை! ஆனாலும் பணம் எடுக்கலாம்!
நீண்டகால முதலீடுக்கு ஏற்றதா?
மற்ற திட்டங்களைவிட கூடுதலாக வட்டி கொடுத்தாலும், இதே வட்டி விகிதம் கடைசி வரை இருக்குமா? என்பது கேள்விக்குறி. இது குறித்து பேசும் பங்குச்சந்தை நிபுணர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றுவதற்கான வாய்ப்பு இதில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும், பங்குசந்தைகளை பற்றி அறியாதவர்கள் மட்டுமே சுகன்யா சம்ரிதி யோஜனாவை தேர்தெடுப்பார்கள் என கூறும் நிபுணர்கள், நீண்டகால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஈக்விட்டி (Equities) சிறந்த தேர்வு என கூறுகின்றனர்.
சேமிப்பு முழுவதையும் செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்யாமல், சிறு தொகையை அதில் முதலீடு செய்துவிட்டு, எஞ்சிய பணத்தை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். செல்வமகள் திட்டம் முதிர்வு காலத்தை நெருங்கும்போது, அதில் முதலீட்டை அதிகப்படுத்தி, ஈக்விட்டியில் முதலீட்டை குறைக்கலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணத்தை, உங்கள் பெண் குழந்தை 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் அல்லது 18 வயதை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR