எனது ஆணுறுப்பில் விரைப்பு அடையாததற்கு காரணம் நான் படித்த பல்கலைகழகம் தான் என முன்னாள் மாணவர் வழக்கு!!
இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாக்கு Ph.D. படிக்க சென்ற இந்தியா மாணவர் தனது ஆணுறுப்பு தற்போது விரைப்பு தன்மை அடையாததற்கு தான் படித்த பல்கலைகழகம் தான் காரணம் என அவர் வழக்கு பதிவு செய்த்துள்ள சம்பவம் பலரையும் ஆட்சர்யமடைய வைத்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த குல்தீப் மான் (Kuldeep Mann) என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஜேம்ஸ் குக் (James Cook University in Queensland) என்ற பல்கலையில் Ph.D. பட்டபடிப்பு படிக்க சேர்ந்துள்ளார். அப்போது, அங்கு ஏற்பட்ட ஒரு கருத்து திருட்டு பிரச்சனையில் அவரை அந்த பல்கலை., நீக்கம் செய்தது.
இந்நிலையில் அவர் தற்போது அந்நாட்டு கோர்ட்டில் அந்த பல்கலை., மீது வழக்கு தெடார்ந்துள்ளார். அந்த வழக்கில் தனக்கு தற்போது ஆணுறுப்பு விரைப்பு தன்மையடைவதில்லை எனவும், தான் இந்த பல்கலையில் சேர்ந்து படித்த பின்புதான் இந்த பிரச்சனை எனவும், படிக்கும் போது அவர்கள் கொடுத்த மனஅழுத்தம் காரணமாகவே இது நிகழ்ந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இதற்கு நஷ்ட ஈடாக 3.125 மில்லியன் டாலர் தர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியர் ஒருவர் ஆஸ்திரேலிய பல்கலை., மீது தனக்கு ஏற்பட்ட செக்ஸ் ரீதியிலான பிரச்னைக்கு அந்த பல்கலை., தான் காரணம் என வழக்கு தொடர்ந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.