உங்கள் மாமியாரிடம் கூறக்கூடாத விஷயங்கள்! அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க..

Things You Should Never Say To Your Mother In Law : நம்மில் பலர், பல விஷயங்களை அம்மா போல கருதி மாமியாரிடம் கூறி விடுவோம். அப்படி, நாம் உலறிக்கொட்டிவிட கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 25, 2024, 04:16 PM IST
  • மாமியாரிடம் கூறவே கூடாத விஷயங்கள்
  • வீண் சண்டைகளை தவிர்க்கலாம்
  • என்னென்ன தெரியுமா?
உங்கள் மாமியாரிடம் கூறக்கூடாத விஷயங்கள்! அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க.. title=

Things You Should Never Say To Your Mother In Law : சாதாரணமாகவே, கணவரின் அல்லது மனைவியின் தாயுடன் (மாமியாருடன்) நல்ல உறவை மெயிண்டெய்ன் செய்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயமாகும். குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் மாமியர், கணவனை போல அல்லாமல் டாக்ஸிக்காக கிடைத்து விட்டால் அந்த இல்வாழ்க்கையே கொஞ்சம் சிரமமாகி விட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் மாமியாருடன் இணக்கமான உறவு இல்லை என்றாலும் பிரச்சனைதான். எனவே, மாமிடியாருடன் ஆன உறவு கெட்டுப்போகாமல் இருக்க ஒரு சில விஷயங்களை அவர்களிடம் கூறவே கூடாது. அவை என்னென்ன தெரியுமா?

“நீங்கள் எனது அம்மா இல்லை”

ஏதேனும் சண்டையில், மாமியாராக இருப்பவர்கள் ஏதேனும் கூறினால், அப்போது நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவர் உங்களது அம்மா இல்லை என்பது உண்மை என்றாலும், அவர் உங்களுடன் ஏற்படுத்த முயலும் உறவு முறையானது தாய்மைக்கு இணையானதாக அவர் கருதுவார்.  எனவே, அவர் உங்கள் மீது அக்கறை எடுத்து ஏதேனும் கூற வரும் போது நாம் “நீங்கள் ஒன்னும் எனக்கு தாய் இல்லை..” என்று சொல்ல வேண்டாம். 

குடும்பத்தை பற்றி பேசுவது:

ஒரு பெண், தனது பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது, அவரது வீட்டு பழக்கங்கள் இந்த வீட்டில் தொடராது என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. எனவே, இரு வீட்டின் கலாச்சாராத்தையும் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே சிறந்ததாகும்.

மேலும் படிக்க | உங்கள் சக ஊழியரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத விஷயங்கள்!

குழந்தை வளர்ப்பு:

வயதானவர்கள் பலர், மிகவும் பிற்போக்குத்தனமான கருத்துகளைத்தான் கொண்டிருப்பர் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும். அவர்கள், அவர்களின் மகனை/மகளை சரியாக வளர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் வளர்ந்து உங்களை திருமணம் செய்த பிறகு நீங்கள் இது குறித்து பேசுவது வேண்டாத காரியம் ஆகும். ஆனால், அதே மாமியார் உங்களின் குழந்தை வளர்ப்பு பற்றி ஏதேனும் கூற வந்தால், கண்டிப்பாக அப்போது நீங்கள் அவரை மூக்கை நுழைக்க வேண்டாம் என கூறலாம். 

வாழ்க்கையை விட்டு தள்ளி இருக்க கூறுதல்:

அனைத்து உறவுகளிலும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கோடு போட்டு வாழ்வது அவசியம் என்றாலும், யாராலும் ஒரு சில உறவினர்களை மொத்தமாக வாழ்வை விட்டு நீக்கிவிட முடியாது. எனவே, “எங்கள் வாழ்க்கையை விட்டு தள்ளி இருங்கள்” என உங்கள் மாமியாரிடம் கூறாதீர்கள். 

ஒப்பிடுதல்:

உங்கள் மாமியாருக்கு உங்கள் கணவர் அல்லது மனைவியை தவிர இன்னொரு உடன் பிறந்தவர்களும் இருக்கலாம். அந்த உடன் பிறந்தவரின் குடும்பத்தை ஒரு மாதிரியும் உங்களை ஒரு மாதிரியும் உங்கள் மாமியார் நடத்துகிறார் என்று தெரிந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டாம். இந்த ஒப்பீடு, பல சமயங்களில் தவறாக இருந்து, குடும்பத்தின் அமைதியை நிலைகுலைய செய்யலாம். எனவே, இந்த ஒப்பீட்டை முற்றிலுமாக தவிர்த்து விடவும். 

உதவி செய்ய வற்புறுத்துவது:

இப்போது இருக்கும் பல கணவன் மனைவிகள், தங்களின் குழந்தைகளை மாமனார்-மாமியார் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். சொல்லப்போனால் அவர்களை பலர், சம்பளம் கொடுக்காத பேபி-சிட்டரின் இடத்தில்தான் வைத்து பார்க்கின்றனர். இதனால், வயதானவர்கள் பல சமயங்களில் ரெஸ்ட் கூட எடுக்க முடியாத நிலை வந்து விடுகிறது. எனவே, அவர்களிடம் எப்போதாவது முடியாத சமயத்தில் உதவி கேட்கலாம். இதில் தவறு இல்லை என்றாலும், அவர்கள் அந்த உதவியை செய்தே ஆக வேண்டும் என்று நினைக்க கூடாது. இதனால் தேவையற்ற பல மனஸ்தாபங்கள் எழலாம்.

மேலும் படிக்க | உங்கள் முதலாளியிடம் மறந்தும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News