இந்த ராசிக்காரர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால், நீங்கள்தான் அட்கிர்ஷ்டசாலி!!

இந்த ராசிக்கார நண்பர்கள் கிடைத்தால், வாழ்க்கை ஒரு சொர்க்கம்தான். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2022, 01:27 PM IST
  • நண்பர்கள் ஒவ்வொரு நபரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்களை நண்பர்களின் நண்பர்கள் என்று அழைப்பது முற்றிலும் சரியாக இருக்கும்.
  • மகர ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் நண்பர்களாக ஏற்க மாட்டார்கள்.
இந்த ராசிக்காரர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால், நீங்கள்தான் அட்கிர்ஷ்டசாலி!! title=

Friends Horoscope: நண்பர்கள் ஒவ்வொரு நபரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள் கிடைத்தால், கடினமான காலங்கள் கூட எளிதாக கடந்துவிடும். இருப்பினும், உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிப்பது அல்லது அடையாளம் காண்பது மிகவும் கடினமாகும். 

பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அப்படிப்பட்ட சிறந்த நண்பனைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் நட்பு என்ற பெயரில் பிறரை ஏமாற்றி, நட்பிற்கே களங்கம் விளைவிக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் நட்பைப் பேணுவதில் மிகவும் உன்னதமானவர்கள். இவர்கள் கடினமான காலங்களில் தூண் போல தங்கள் நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். தங்கள் நண்பர்கள் தவறான பாதையில் செல்வதை எப்படியாவது தடுத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தால், வாழ்க்கை ஒரு சொர்க்கம்தான். மிகச்சிறந்த நண்பர்களாக இருக்கக்கூடிய ராசிகளைப் (Zodiac Sign) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் நல்லவர்களாகவும் உண்மையான நண்பர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மிகுந்த நேர்மையுடன் நட்பைப் பேணுகிறார்கள். தங்கள் கடைசி காலம் வரை தங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். 

மிதுனம் (Gemini)
மிதுன (Gemini) ராசிக்காரர்கள் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள். அவர்கள் யாருடன் நட்பாக இருக்கிறார்களோ, வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், தங்கள் நண்பர்களின் அருகிலிருந்து இவர்கள் அகல மாட்டார்கள். மிதுன ராசிக்காரர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி.

சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களை நண்பர்களின் நண்பர்கள் என்று அழைப்பது முற்றிலும் சரியாக இருக்கும். அவர்கள் வாழ்க்கை முழுவதும் தோழமையை நிலைநாட்டுவதோடு, கடினமான நேரங்களில் தூண் போல அருகில் இருந்து உதவுகிறார்கள். சுவாரசியமான குணமுடைய இவர்கள் தங்கள் நண்பர்களை சலிப்படைய விடமாட்டார்கள். 

ALSO READ | 2022-ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு இந்த ஆண்டு ராஜ யோகம்!!

கன்னி ராசி (Virgo)

கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்களது  நட்பை பற்றி ஆரம்பத்தில் புரியாமல் இருக்கலாம், ஆனால் இவர்கள் எவ்வளவு சிறந்த நண்பர்கள் என்பது போகப்போக புரியும். கன்னி ராசிக்காரர்களுடனான நட்பு முறிந்தாலும், அவர்கள் எப்போதும் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் கூற மாட்டார்கள். 

மகரம் (Capricorn)
மகர (Capricorn) ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் நண்பர்களாக ஏற்க மாட்டார்கள். ஆனால், மகர ராசிக்காரர்கள் ஒருவரை தங்கள் நண்பராக ஏற்றுக்கொண்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் மிக உண்மையான நண்பராக இருப்பார்கள். இப்படிப்பட்ட நண்பர்கள் யாருக்காவது கிடைத்தால், அவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | திருமணத் தடையை உண்டாக்கும் கால சர்ப்ப தோஷம்; பரிகாரம் என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News