சருமம்-முடி இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் 5 உணவுகள்! என்னென்ன தெரியுமா?

Natural Foods To Protect Your Skin And Hair : நம் அனைவருக்கும் சருமத்தையும் முடியையும் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 14, 2024, 04:57 PM IST
  • சருமத்தையும் முடியையும் பாதுகாக்க டிப்ஸ்
  • 5 இயற்கை உணவுகள்..
  • என்னென்ன தெரியுமா?
சருமம்-முடி இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் 5 உணவுகள்! என்னென்ன தெரியுமா? title=

Natural Foods To Protect Your Skin And Hair : பெண்கள்-ஆண்கள் என பாலின பாகுபாடின்றி அனைவருக்குமே தங்களின் சருமத்தையும், முடியையும் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதிலும் பலருக்கு இரண்டையும் தனித்தனியாக பார்த்துக்கொள்ள முடியாமல் போவதால், ஒரே உணவில் இரண்டிற்கும் நன்மை கிடைக்க வேண்டும் என நினைப்பர். அப்படி யோசிப்பவர்களுக்கான பதிவுதான் இது. 

வைட்டமின் ஈ உணவுகள்:  

நாம் தினசரி சாப்பிடும் உணவில், சரியான வைட்டமின் ஈ சத்து இருந்தாலே தோலையும் முடியையும் சரியாக பராமரிக்கலாம் என கூறுகின்றனர் மருத்துவர்கள். இவற்றால் ஒட்டுமொத்த உடலுக்கும் கூட ஆரோக்கியம் கூடுமாம். 

பலர், மிருதுவான சருமத்தை பெறுவதற்கும் பளபளப்பான கூந்தலை அடைவதற்கும் ஆன்லைனில் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். இவை ஒரு வகையில் நம்மை அழகுப்படுத்திக்கொள்ள உதவினாலும் நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுதான் உள்ளூற இருந்தும் நம்மை அழகாக்க உதவும். அதற்கு உதவும் 5 இயற்கை உணவுகள் குறித்து இங்கு பார்ப்பாேம். 

வள்ளிக்கிழங்கு: 

பலரது இல்லங்களில் மாலை நேர ஹெல்டி ஸ்நாக்ஸ் ஆக இருக்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இதனை அவித்து, லேசாக சர்க்கரை தூவி சாப்பிட சிலருக்கு பிடிக்கும். இவை சுவையாக இருக்கும் என தெரிந்த நமக்கு, தோல் மற்றும் முடி பராமறிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெரியுமா? இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்துகள், கேசத்தை பளபளப்பாக்கி, தோலையும் மென்மையாக்குமாம். 

சூர்யகாந்தி விதைகள்: 

28 கிராம் சூரியகாந்தி விதைகளில், சுமார் 7 மில்லிகிராம் வைட்டமின் ஈ சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது, நமக்குள் ஏற்படும் செல் சிதைவை தடுத்து நிறுத்தி, சருமத்தை சீக்கிரமாக வயதாக செய்யாமல் இருக்குமாம். 

அவகேடோ: 

பேச்சு மொழியில் பட்டர் ஃப்ரூட் என்று அழைக்கப்படும் அவகேடோவில் உடலுக்கு நன்மை அளிக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை சாப்பிடுவதால் மென்மையான தோல் உருவாகி, ஈரப்பதத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடியுமாம். அதே போல, சரும சுருக்கங்களையும் இந்த பழம் நீக்குவதாக கூறப்படுகிறது. சரும பாதிப்புகள் ஏற்பட, சுற்றுச்சூழலும் பெரிய காரணமாக இருக்கிறது. இதை பேலன்ஸ் செய்யவும் அவகேடோ பழங்கள் உதவுமாம். 

மேலும் படிக்க | பிரேக் அப் செய்த உடனே இன்னொரு காதலா? வேண்டாம், எஸ்கேப் ஆயிடுங்க... நல்லது..!

பாதாம்:

பாதாம், உடல் எடையை குறைக்க அல்லது உயர்த்த விரும்புபவர்களின் விருப்பமான உணவு பட்டியலில் முதல் பெயராக இருக்கும். இதுவும், வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்றாகும். இவை, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுவதோடு வெயிலால் சரும பாதிப்பு ஏற்படாமலும் தடுக்குமாம். முடி இழப்பிற்கு காரணமாக இருக்கும் அம்சங்களை கட்டுப்படுத்த பாதாமை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

கீரை:

சருமம் சீக்கிரமாக சுருங்குவதில் இருந்து பாதுகாக்க, வயதான தோற்றத்தை தடுக்க உதவும் உணவுகளுள் ஒன்றாக இருக்கிறது கீரை. சரும செல்கள் சேதமடைவதை பாதுகாக்கும் இந்த உணவு, வைட்டமின் ஈ சத்துகளால் நிரம்பியிருப்பதால், இயற்கையாகவே சருமத்திற்கும் முடிக்கும் பொலிவு கொடுக்குமாம். 

மேலும் படிக்க | ‘இந்த’ 7 விஷயங்களை எப்பவும் பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News