நடுவானில் பறந்த விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

விமானத்தில் தாய்லாந் பெண்ணுக்கு பிரசவ வலி; நடுவானில் பிறந்த அழகிய குழந்தை..!

Last Updated : Feb 4, 2020, 12:32 PM IST
நடுவானில் பறந்த விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்! title=

விமானத்தில் தாய்லாந் பெண்ணுக்கு பிரசவ வலி; நடுவானில் பிறந்த அழகிய குழந்தை..!

தோகாவில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால் மேற்கு வங்காளத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. கதார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான QR-830 என்ற விமனம் தோஹாவில் இருந்து பாங்காக் சென்றது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் பயணித்த தாய்லாந்தை நேர்ந்த 23 வயது கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்த அவருக்கு சில நிமிடங்களில் குழந்தை பிறந்தது.  

இதையடுத்து, விமானி கொல்கத்தா விமான நிலையத்தை தொடர்ப்பு கொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். இதையடுத்து காலை 3.15 மணிக்கு விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தாயும் குழந்தையும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

 

Trending News