தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.
1) நிறுவனம் :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
2) இடம் :
திருவாரூர்
3) காலி பணியிடங்கள் :
02
மேலும் படிக்க | என்ஐடியில் 31,000 சம்பளத்தில் வேலை - முழு விவரம்
4) பணிகள் :
சமூக சேவகர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
5) கல்வி தகுதிகள் :
சமூக சேவகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Social Work, Guidance and Counselling, Psychology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் / தமிழில் தட்டச்சு செய்வதில் Senior Grade சான்றிதழ் பெற்றவராகவும், கணிப்பொறி இயக்குவதில் அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
6) முன் அனுபவம் :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
7) வயது வரம்பு :
சமூக சேவகர் பணிக்கு வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது இருக்கவேண்டும்.
8) சம்பளம் :
சமூக சேவகர் - ரூ.14,000
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - ரூ.9,000
9) தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
10) விண்ணப்பிக்கும் முறை :
https://tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
11) முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
311, 3வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம்,
திருவாரூர்-610004.
12) கடைசி தேதி :
24.06.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் படிக்க | OPGC Recruitment 2022: பொறியியல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR