சூரியனின் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு அமோக லாபம், சிலருக்கு அதிருப்தி

Sun Transit: கிரகங்களின் ராஜாவான சூரியனின் ராசி சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2022, 12:14 PM IST
  • சூரியன் ராசி மாறுகிறார்.
  • இன்று மேஷ ராசியில் நுழைவார்.
  • எதிரிகளிடம் ஜாக்கிரதை.
சூரியனின் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு அமோக லாபம், சிலருக்கு அதிருப்தி title=

சூரிய ராசி மாற்றம் 2022: இன்று அதாவது ஏப்ரல் 14, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைகிறார். அடுத்த ஒரு மாதத்திற்கு சூரியன் இந்த ராசியில் தங்கி இருப்பார். இந்த ராசி மாற்றத்தின் சுப, அசுப பலன்கள் 12 ராசிகளிலும் காணப்படும். கிரகங்களின் ராஜாவான சூரியனின் ராசி சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

மேஷம்: இந்த ராசியில்தான் சூரியனின் பெயர்ச்சி நடக்கிறது. ஆகையால், அசுப பலன்கள் உண்டாகும். மேஷ ராசிக்காரர்களின் கோபம் அதிகரிக்கும். பணியிடத்தில் தகராறு ஏற்படலாம். பயணத்தின் போது கவனமாக இருங்கள். செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தடைகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கலாம். வெளிநாட்டில் இருந்து லாபம் கிடைக்கும். பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். மேல் அதிகாரிகளிடம் ஜாக்கிரதை தேவை.

மிதுனம்: பெரிய பண ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல நேரம் பிறக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் நல்ல தகவல் கிடைக்கலாம்.

கடகம்: பணியில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணிபுரியும் இடத்தில் அற்புதமான சூழ்நிலை இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

சிம்மம்: கடின உழைப்பின் படி பலன் கிடைக்காது. செலவுகள் அதிகரிக்கும். நோய்களால் தொந்தரவு வரலாம். வேலையில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் கோபமான சூழல் உருவாகலாம். 

கன்னி: பணி சாதாரணமாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்கள் இருக்கலாம். திடீர் பண ஆதாயம் வரக்கூடும். ஆனால் செலவுகள் அதிகரிப்பதால் கவலை அடைவீர்கள்.

மேலும் படிக்க | சுபகிருது தமிழ் புத்தாண்டு யாருக்கு என்ன செய்தியை சொல்கிறது? மேஷத்திற்கு மோசமில்லை 

துலாம்: வேலையில் அதிக கவனம் தேவை, இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கூட்டுப் பணிகளில் குறிப்பாக கவனமாக இருக்க வேடும். சோர்வாக உணர்வீர்கள்.

விருச்சிகம்: நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எதிரிகளை வெல்வீர்கள். பணம் கிடைக்கும், கௌரவம் கூடும். மொத்தத்தில் இந்த நேரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.

தனுசு: வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். பணம் பெருகும். நிதி நிலை வலுவடையும். பங்குதாரர் நன்றாக இருப்பார்.

மகரம்: தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

கும்பம்: முதலீடு சாதகமாக இருக்கும். கௌரவம் பெறலாம். பயணம் செல்ல வாய்ப்புகள் வரும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக இருங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு  பண இழப்பு ஏற்படலாம். ஆணவத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்களுக்கு நீங்களே தீமை செய்துகொள்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனமாக பேசுங்கள். தகராறில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கோப மிகுதியால் பணியிலும், வாழ்விலும் தோல்வியை சந்திக்கும் ராசிகள் இவைதான் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News