Split AC Vs Window AC... உங்களுக்கான சிறந்த ஏசி எதுவாக இருக்கும்..!!

ஏசி வாங்க திட்டமிடும் போது, எந்த ஏசி வாங்குவது என்ற அதிக மின்சாரம் செலவழிக்கிறது என்ற குழப்பத்தில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்பிளிட் ஏசி, விண்டோ ஏசி இரண்டில் எது சிறந்தது என்பதை ஆராயலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2024, 07:31 AM IST
  • பட்ஜெட் குறைவாக இருந்தால், ஜன்னலில் பொருத்தக் கூடிய விண்டோ ஏசி வகையை வாங்குவது நல்லது.
  • ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர் உங்கள் அறையின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
  • விண்டோ ஏசி குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்று பலர் நினைக்கிறார்கள்.
Split AC Vs Window AC... உங்களுக்கான சிறந்த ஏசி எதுவாக இருக்கும்..!! title=

நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலில், குறிப்பாக வட இந்தியாவில் மக்களின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. பகலில் மக்கள் சாலையில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. வீடுகளிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் ஏசி, கூலர், மின்விசிறி உள்ளிட்டவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க பலரும் ஏசி வாங்க தயாராகி வருகின்றனர். 

ஏசி வாங்க திட்டமிடும் போது, எந்த ஏசி வாங்குவது என்ற அதிக மின்சாரம் செலவழிக்கிறது என்ற குழப்பத்தில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்பிளிட் ஏசி, விண்டோ ஏசி இரண்டில் எது சிறந்தது என்பதை ஆராயலாம்.

பட்ஜெட்

உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், ஜன்னலில் பொருத்தக் கூடிய விண்டோ ஏசி (Air Conditioner) வகையை வாங்குவது நல்லது. இதற்குக் காரணம், இதன் விலை ஸ்பிலிட் ஏர் கண்டிஷனரை விட குறைவாக உள்ளது. கூடுதலாக, குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்டுள்ளது. உங்களுக்கு பட்ஜெட் பிரச்சனை இல்லை என்றால், நீங்கள் ஸ்பிலிட் ஏர் கண்டிஷனரை வாங்க வேண்டும். ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர் உங்கள் அறையின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், குளிரூட்டும் வகையில் ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர் சிறந்தது. மேலும், வெளிப்புறத்தில் சத்தம் இல்லாமல் செயல்படுவதா

மின்சார செலவு

ஸ்பிலிட் ஏசியுடன் ஒப்பிடும்போது ஜன்னலில் பொருத்தக்கூடிய விண்டோ ஏசி குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்று பலர் நினைக்கிறார்கள். இதுமட்டுமின்றி, ஜன்னல் ஏசியின் அளவு சிறியதாகவும், அதில் ஒரு யூனிட் இருப்பதால், பில் குறைவாக இருப்பதாகவும் பல நேரங்களில் நினைப்பார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை என்று சொல்லிவிடுவோம். ஸ்பிலிட் ஏசியுடன் ஒப்பிடும்போது ஜன்னல் ஏசியில் மின்சாரம் அதிகம் செலவாகும் என்பதால் மின்சார கட்டணம் அதிகம் செலுத்த வேண்டி இருக்கும். சந்தையில் ஸ்பிலிட் ஏசியை விட ஜன்னல் ஏசி மலிவானதாக இருக்கும் என்றாலும், ஏசி வாங்குவதில் நீங்கள் சேமிக்கும் பணத்தை விட அதிக அளவிலான பணத்தை. மின்கட்டணத்தில் அதைவிட அதிகப் பணம் செலவழிப்பீர்கள்.

மேலும் படிக்க | மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்

ஜன்னல் ஏசிக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகும்?

ஒரு ஜன்னல் ஏசி பொதுவாக ஒரு மணி நேரம் இயங்கினால், 900 முதல் 1400 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. குளிர்ச்சியை அதிகரிக்க ஏசியின் வெப்பநிலையைக் குறைக்கும்போது, ​​கம்ப்ரஸரில் அதிக அழுத்தமும், மின் நுகர்வும் அதிகமாகும்.

சிறிய அறைகளுக்கு ஜன்னல் ஏசி பயனுள்ளதாக இருக்கும்

உங்கள் அறைக்கு ஏற்ப ஏசி எப்போதும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உங்கள் அறை சிறியதாக இருந்தால், ஜன்னல் ஏசி உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஜன்னல் ஏசியை எளிதாக சாளரத்தில் பொருத்தலாம். ஜன்னல் சிறிய அறைகளிலும் நல்ல குளிர்ச்சியை வழங்கும். ஸ்பிலிட் ஏசியை விட மலிவாகக் வாங்கலாம். மேலும் ஸ்பிலிட் ஏசியை பொருத்த.

மேலும் படிக்க | Honda Activa-வை தூக்கிச்சாப்பிடும் புதிய EV ஸ்கூட்டர்... பவர்ஃபுல் Ather Rizta - சிறப்புகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News