மதுரை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு - நல்ல சம்பளம்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்

மதுரை தபால் நிலையத்தில் Skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 4, 2022, 04:29 PM IST
  • மதுரை தலைமை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • அக்டோபர் 17ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்
மதுரை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு - நல்ல சம்பளம்; வாய்ப்பை தவறவிடாதீர்கள் title=

மதுரை மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தி காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, M.V.Mechanic (Skilled) – 1 பணியிடங்கள், M.V.Electrician – 2 பணியிடங்கள், Painter (Skilled) – 1 பணியிடம், Welder – 1 பணியிடம், Carpenter – 2 பணியிடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட காலி பனியிடங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் எந்த காரணமும் தெரிவிக்காமல் அறிவிப்பை மாற்ற/ரத்துசெய்யும் உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

01.07.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள்வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test முலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாடத்திட்டம், தேதி, இடம் & காலம் போன்றவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Skilled Artisans – ரூ.19,900 முதல் ரூ.63200வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை தனித்தனி உறையில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அஞ்சல் மோட்டார் சேவை, CTO வளாகம், தல்லாக்குளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மற்றும் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அசத்தும் இந்திய ரயில்வே; வாட்ஸ்அப்பில் PNR, ரயிலின் நிலை அறிந்து கொள்ளும் வசதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News