சஷ்டி விரதம் 2023: வளர்பிறையில் ஒரு சஷ்டி, தேய் பிறையில் ஒரு சஷ்டி திதி என மாதந்தோறும் 2 சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி பெரு விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கந்த சஷ்டி விழா முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தெய்வானையை திருக்கல்யாணம் செய்வதுடன் முடிவடைகிறது. திருச்செந்தூரில் தான் முருகப்பெருமான சூரபத்மனை வதம் செய்து ஜெயந்தி நாதராக அருள் புரிகிறார். இதன் காரணமாக கந்த சஷ்டி பெருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை கண்டு அடுத்த நாள் முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு களித்து வீடு திரும்புவர்.
இந்நிலையில் கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும், விரதமிருப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | வீட்டில் குபேர பூஜை செய்தால் கஷ்டங்கள் எல்லாம் விலகும்..!
உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.
மாதம் மாதம் வரும் திதி விரதமிருந்தால் விதி மாறும் என்பது நம்பிக்கை. எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று சஷ்டி திதியாகும். இதனால் இன்றைய தினம் சஷ்டி விவரம் மேற்கொண்டு மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.
இந்த வியவரம் பொதுவாக குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இருக்கலாம். அதேபோல் விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் படித்தல் மற்றும் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.
கந்த சஷ்டி விரதப் பலன்கள்:
ஆணவம், வன்மம், குரோதம், காமம் போன்ற தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் நமக்கு கிடைக்கும். கந்த சஷ்டி விழாவில் சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் வெற்றிக் கண்டது போல் இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் வரும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தா அகப்பையான கருப்பையில் குழந்தை பேறு கிடைக்கும் என்பது தான். எனவே குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை கிடைக்கும். மேலும் 16 வகை செல்வங்களையும் முருகப்பெருமான் வழங்குவார்.
விரதத்தில் என்ன செய்ய வேண்டும்?
கந்த சஷ்டி கவசம் படிப்பது, முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, திருப்புகழ் படிப்பது, ஓம் சரவண பவ என்று தினமும் 108 முறை எழுதுவது போன்றவற்றை செய்யலாம். முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்து வாழ்வில் வெற்றியையும், அனைத்து செல்வங்களையும் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ