இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில், பைலட் பற்றாக்குறையால் இன்றும் 130 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் மலிவு விலையில் விமான சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ நிறுவனம் ஆகும். கடந்த சில நாள்களாக இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில், பைலட் பற்றாக்குறை காரணத்தால் சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடைசி நிமிடங்களில் விமானப் பயணம் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஒரு நாளொன்றுக்கு 30 விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த புதன்கிழமை 49 விமானங்களையும், வியாழக்கிழமை 70 விமானங்களையும் இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
இந்நிலையில் இன்று 130 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது இண்டிகோ நிறுவனம். குறிப்பாக, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் அதிகளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.