SBI அளிக்கும் பம்பர் சலுகைகள்: பெரிய பிராண்டுகளில் எக்கச்சக்க தள்ளுபடிகள்

SBI Yono: எஸ்பிஐ யோனோ தனது வாடிக்கையாளர்களுக்கு 'சூப்பர் சேவிங் டேஸ்' மூலம் அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2022, 12:12 PM IST
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி.
  • சில பெரிய பிராண்டுகளில் இருந்து ஷாப்பிங் செய்வதில் 45 சதவீத தள்ளுபடி.
  • ஏப்ரல் 7, 2022 வரை இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
SBI அளிக்கும் பம்பர் சலுகைகள்: பெரிய பிராண்டுகளில் எக்கச்சக்க தள்ளுபடிகள் title=

புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் மொபைல் செயலியான யோனோவின் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. யோனோ தனது வாடிக்கையாளர்களுக்கு 'சூப்பர் சேவிங் டேஸ்' மூலம் அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது. 

யோனோ தனது வாடிக்கையாளர்களுக்கு சில பெரிய பிராண்டுகளில் இருந்து ஷாப்பிங் செய்வதில் 45 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. ஏப்ரல் 7, 2022 வரை இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்தெந்த பிராண்டுகளில் இருந்து ஷாப்பிங் செய்தால் என்ன தள்ளுபடி கிடைக்கும்?

ட்விட்டரில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ள யோனோ, அமேசான், லைஃப்ஸ்டல், ஓயோ, அஜியோ, ஈஸ்மைட்ரிப், வேதாந்து மற்றும் மகிந்திரா ஆகியவற்றிலிருந்து யோனோ மூலம் ஷாப்பிங் செய்வதன் மூலம் பயனர்கள் பெரும் தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறியுள்ளது. 

வழங்கப்பட்ட தகவலின்படி, Amazon.in இலிருந்து யோனோ மூலம் ஷாப்பிங் செய்வதில் 2.5 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். அதே நேரத்தில், அஜியோவில் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். யோனோ மூலம் ஓயோவைப் பயன்படுத்தினால் 45 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். 

மேலும் ஈஸ்மைட்ரிப் உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.850 தள்ளுபடியை வழங்கும். லைஃப்ஸ்டைல் ​​ஸ்டோர்கள் யோனோ மூலம் வாங்கும் போது கூடுதலாக 20% தள்ளுபடியை வழங்கும். மறுபுறம், வேதாந்து உங்களுக்கு 25% தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, மஹிந்திரா & மஹிந்திரா, நீங்கள் யோனோ மூலம் ஷாப்பிங் செய்யும் போது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கார் கடனில் தொடர்புடைய பலன்கள் மற்றும் கார் பாகங்கள் மீதான தள்ளுபடியை வழங்குகிறது.

மேலும் படிக்க | QR கோடை ஸ்கேன் செய்யவேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!

சலுகைகளைப் பெறுவது எப்படி

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் முதலில் SBI YONO செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘ஷாப் அண்ட் ஆர்டர்’-ல் கிளிக் செய்யவும். அதன் பிறகு யோனோ சூப்பர் சேவிங் டெஸ் சேலை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யவும். 

எஸ்பிஐ ஒன்லி யோனோ என்ற செயலியை கொண்டு வருகிறது

எஸ்பிஐ, எதிர்காலத்திற்கு ஏற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், இந்த திசையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காக யோனோ செயலியை ஒரு தனி டிஜிட்டல் எண்டிடியாக வங்கி உருவாக்குகிறது. 

இந்த புதிய எண்டிடியின் பெயர் ‘ஒன்லி யோனோ’ என்று இருக்கும் என வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ தற்போதுள்ள யோனோ வாடிக்கையாளர்களை புதிய நிறுவனத்திற்கு மாற்றும். மேலும் 12 முதல் 18 மாதங்களில் இந்த பணி முடிவடையும் என்றும் நம்பிக்கை உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | SBI டெபிட் கார்டு பின்; வீட்டில் இருந்தபடி இதைச் செய்யுங்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News