SBI Offer: இந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ரூ. 2 லட்சம் வரையிலான இலவச நன்மை

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான இலவச பலனை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 01:53 PM IST
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • ஜன்தன் கணக்கு திறக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை SBI SBI மூலம் தீர்மானிக்கப்படும்.
  • பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன.
SBI Offer: இந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ரூ. 2 லட்சம் வரையிலான இலவச நன்மை title=

SBI Insurance Cover: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான இலவச பலனை வழங்குகிறது. RuPay டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அனைத்து ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், ரூ.2 லட்சம் வரை இலவச விபத்துக் காப்பீட்டை (Complimentary Accidental Cover) வங்கி வழங்குகிறது.

இந்த வகையில் 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்

வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் ஜன்தன் கணக்கு திறக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை SBI மூலம்  தீர்மானிக்கப்படும். ஆகஸ்ட் 28, 2018-க்குள் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்கு தொடங்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் RuPay PMJDY கார்டில் ரூ. 1 லட்சம் வரை காப்பீடு தொகை கிடைக்கும். ஆகஸ்ட் 28, 2018-க்குப் பிறகு வழங்கப்படும் ரூபே கார்டுகளில், தற்செயலான காப்பீட்டுப் பலன் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்.

இவர்கள் பலன் அடைவார்கள்

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பூஜ்ஜிய இருப்பில் நாட்டின் ஏழைகளின் கணக்கு திறக்கப்படும் திட்டமாகும். பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவின் (PMJDY) கீழ், வாடிக்கையாளர்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்தவொரு நபரும் ஆன்லைனில் அல்லது KYC ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கிக்குச் சென்று ஜன்தன் கணக்கைத் திறக்கலாம்.

இதுமட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் தங்களது சேமிப்பு வங்கிக் கணக்கை ஜன்தன் கணக்காக மாற்றிக்கொள்ளலாம். இதில் ரூபே (RuPay) வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இந்த டெபிட் கார்டை விபத்து மரண காப்பீடு, கொள்முதல் பாதுகாப்பு மற்றும் இன்னும் பல நன்மைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

ALSO READ: Changing Bank Branch: வீட்டில் இருந்தபடியே வங்கிக் கிளையை மாற்றலாம்..!! 

இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்

ஜன்தன் கணக்கு (Jan Dhan) வைத்திருப்பவர்கள், விபத்து நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இண்ட்ரா அல்லது இண்டர் வங்கிகளில் ஏதாவது ஒரு சேனலில், ஒரு வெற்றிகரமான நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனைகளை செய்திருந்தால், RuPay டெபிட் கார்டின் கீழ் விபத்து மரணக் காப்பீட்டின் பலனைப் பெறுவார்கள். இந்த நிலையில்தான் தொகை வழங்கப்படும்.

இந்த வகையில் பயன்பெறலாம்

கிளெய்மைப் பெற, நீங்கள் முதலில் கிளெய்முக்கான படிவத்தை நிரப்ப வேண்டும். இதனுடன், அசல் இறப்பு சான்றிதழ் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும். FIR இன் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகலை இணைக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் FSL அறிக்கையும் இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகலுடன், அட்டைதாரரிடம் ரூபே கார்டு வைத்திருப்பதற்கான உறுதிமொழியை வங்கி முத்திரைத் தாளில் கொடுக்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாஸ்புக்கின் நகலுடன் நாமினியின் பெயர் மற்றும் வங்கி விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
1. காப்பீட்டு கிளெயிம் படிவம்.
2. இறப்புச் சான்றிதழின் நகல்.
3. அட்டைதாரர் மற்றும் நாமினியின் ஆதார் நகல்.
4. மரணம் வேறு காரணத்தினால் ஏற்பட்டிருந்தால், வேதியியல் பகுப்பாய்வு அல்லது FSL அறிக்கையுடன் கூடிய பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல்.
5. விபத்து பற்றிய விவரங்களை அளிக்கும் எஃப்ஐஆர் அல்லது காவல்துறை அறிக்கையின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்.
6. அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் மற்றும் வங்கி முத்திரை மூலம் முறையாக கையொப்பமிடப்பட்ட அட்டை வழங்கும் வங்கியின் சார்பாக அறிவிப்பு.
7. இதில் வங்கி அதிகாரியின் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் தொடர்பு விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

ALSO READ: SBI அசத்தல் திட்டம்: கிடைக்கும் இரட்டை நன்மை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News