ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்வது மிக அவசியம்

SBI ATM: எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும். இப்போது புதிய விதியின் கீழ், வாடிக்கையாளர்கள் ஓடிபி இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 19, 2022, 11:12 AM IST
  • எஸ்பிஐ ஏடிஎம் வித்ட்ராயல் விதிகளில் மாற்றம்.
  • எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்.
  • புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்வது மிக அவசியம் title=

எஸ்பிஐ ஏடிஎம் வித்ட்ராயல் விதிகளில் மாற்றம்: நம்மில் பெரும்பாலோர் ஏடிஎம்மில் அவ்வப்போது பணம் எடுக்கிறோம். ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான விதிகள் சமீபத்தில் மாற்றப்பட்டன. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும். இப்போது புதிய விதியின் கீழ், வாடிக்கையாளர்கள் ஓடிபி இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் ஃபோனில் ஓடிபி-ஐப் பெறுவார்கள். அதை உள்ளிட்ட பிறகுதான் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும்.

வங்கி தகவல் அளித்துள்ளது
முன்னதாக, இந்த தகவலை வங்கி ஒரு ட்வீட் மூலம் தெரியப்படுத்தியது. 'எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது ஓடிபி அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஓடிபி அடிப்படையில் பணத்தை எடுக்கும் முறை எவ்வாறு செயல்படும் என்பதை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.’ என்று வங்கி ட்வீட்டில் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க | BEL JOBS: பட்டதாரி பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

இப்போது உள்ள விதி என்ன?
இந்த விதிகள் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேலுள்ள தொகைக்கு பொருந்தும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்மிலிருந்து ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி மற்றும் டெபிட் கார்டு பின்னை உள்ளிட வேண்டும். 

புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
- எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க, வாடிக்கையாளர்கள் ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்.
- இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி- அனுப்பப்படும்.
- ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் நான்கு இலக்க எண்ணுடன் ஓடிபி- ஐப் பெறுவார்.
- வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி-ஐ பணம் எடுக்க திரையில் உள்ளிட வேண்டும்.

இந்த விதிகள் எதற்காக உருவாக்கப்பட்டன?
இந்த விதியை உருவாக்குவது குறித்து கூறிய வங்கி, வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த விதி வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்தியாவில் 71,705 பிசி அகவுண்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ஏடிஎம்/சிடிஎம்களுடன் மிகப்பெரிய வங்கி நெட்வொர்காக உள்ளது. 

மேலும் படிக்க | Post Office MIS: ஒரு முறை முதலீடு செய்தால் போதும், மாதா மாதம் வருமானம் தரும் சூப்பரிட் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News