கோலமாவு கோகிலா: சமந்தா புதிய டிவிட்! நயன் ரசிகர்கள் குஷி!

நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலர் குறித்து நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jul 11, 2018, 01:50 PM IST
கோலமாவு கோகிலா: சமந்தா புதிய டிவிட்! நயன் ரசிகர்கள் குஷி! title=

நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலர் குறித்து நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் "எதுவரையோ" என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூன்றாவது பாடலான "ஒரே ஒரு" எனும் பாடல் கடந்த கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியாகி தற்போது வரை 1,383,496 views பெற்றுள்ளது. 

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஜூலை 5-ம் தேதி வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா,

இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

இந்த படம் போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. 

Trending News