ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் இன்று 8வது நாளாக நீடித்து வருகிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படும் நிலையில், போரின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தை சரிந்தது. இதனுடன், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த வாரத்தில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 111 டாலர்களை எட்டியுள்ளது. இது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்வாகும். WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $ 109 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. உலகளவில் விநியோகம் குறைந்ததாலும், பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 1 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயரும்!
IIFL நிறுவனத்தின் ஆராய்ச்சி துறையின் துணைத்தலைவர் அனுஜ் குப்தா இது குறித்து கூறுகையில், 'ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய் ஒன்றுக்கு $111 என்ற அளவில் உள்ளது. இது ஏறக்குறைய 7.5 ஆண்டுகளில் அதிகபட்ச அளவாகும். அதேசமயம் MCX-ல் இது வரி இல்லாத அளவாக, அதிகபட்சமாக 8088 ரூபாயை எட்டியுள்ளது. புவிசார் அரசியல் ஆபத்து மற்றும் விநியோகக் அச்சம் காரணமாக, கச்சா எண்ணெய் இன்னும் 1 மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு $125 என்ற அளவை எட்டலாம். மறுபுறம், MCX-ல், விலை 8500 முதல் 8700 வரை அடையலாம். இது தவிர இந்தியாவில் நீண்ட நாட்களாக பெட்ரோல், டீசலில் எந்த மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் கச்சா விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.15ல் இருந்து ரூ.20 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது' எனக் கூறினார்.
கடந்த 120 நாட்களாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை
கடந்த 120 நாட்களாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் உள்ளது. அதேசமயம், இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இரண்டு மாதங்களில் இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR