சாதனையின் உச்சத்தில் பங்குசந்தைகள்!! நிஃப்டி 11,470 சென்செக்ஸ் 37,947.8

இன்று மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைகள் உச்சத்தை தொட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 04:35 PM IST
சாதனையின் உச்சத்தில் பங்குசந்தைகள்!! நிஃப்டி 11,470 சென்செக்ஸ் 37,947.8 title=

ஆகஸ்ட் 17 வெள்ளியன்று உள்நாட்டு பங்குச் சந்தைகள் வங்கிகள், எப்.எம்.சி.ஜி மற்றும் உலோக பங்குகளின் ஆதரவுடன் முன்னேற்றம் அடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284.34 புள்ளிகள் உயர்ந்து 37,947.88 புள்ளிகளோடு முடிவடைந்தது. நிஃப்டி 85.70 புள்ளிகள் உயர்ந்து 11,470.75 புள்ளிகளில் நிலைபெற்றது. 50 ஸ்கிரிப்ட் குறியீட்டில் அதிகபட்சமாக எஸ்பிஐ, கிரேசிம் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், லூபின் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகியவை 3 சதவீதம் மற்றும் 4.3 சதவீதத்திற்கும் இடையே லாபம் ஈட்டின. 

நிஃப்டி-யை பொருத்த வரை அதன் பங்கு விலை எண் குறியீட்டு எண் 1.1 சதவிகிதம் அதிகரித்தது. இதற்க்கு காரணம் நிஃப்டி வங்கி, பரோடா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளின் விலை 2.3 சதவீதமும், 2.7 சதவீதமும் உயர்ந்தன.

ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்கு 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததால், தேசிய பங்குச் சந்தைக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. ஐ.டி.சி. எப்எம்சிஜி, எச்.யூ.எல், டாபர் மற்றும் பிரிட்டானியா ஆகிய நிறுவனத்தின் பங்குகள் 2.2 சதவீதம் மற்றும் 4.4 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.

நாட்டில் புற்றுநோய் சிகிச்சை மாத்திரைகள் சந்தைக்கு அனுப்ப அனுமதி பெற்ற பிறகு பார்மா கம்பனியான அஸ்ட்ரெஸென்கா-வின் பங்குகள் 10.6 சதவிகிதமாக உயர்ந்து என்பது குறிப்பிடத்தக்கது.

நாணய மற்றும் கடன் சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமையான் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. மீண்டும் வர்த்தகம் திங்கள்கிழமை நடைபெறும்.

Trending News