Ration Card வைத்திருப்பவர்களுக்கு பம்பர் பரிசு, இனி ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும்

Free Ration Update: ஜூன் 2021 இல், எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ரேஷன் கிடங்கில் எண்ணெய் விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியது. அதே சமயம் எண்ணைக்கு பதிலாக கார்டு வைத்திருப்பவர்களின் கணக்கில் மாதம் ரூ.250 அனுப்ப திட்டமிடப்பட்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 04:12 PM IST
  • ரேஷன் கடைகளில் புதிய உத்தரவு
  • ரேஷன் கார்டு சமீபத்திய செய்திகள்.
  • ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் கிடைக்கும்.
Ration Card வைத்திருப்பவர்களுக்கு பம்பர் பரிசு, இனி ஒவ்வொரு மாதமும் பணம் கிடைக்கும் title=

ரேஷன் கார்டு சமீபத்திய செய்திகள்: நீங்களும் அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் கோதுமை-அரிசி போன்றவற்றை பெற்றுக்கொண்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில், ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கும் (AAY) இரண்டு லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்னதாக கடந்த ஜூன் 2021 இல், எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ரேஷன் கிடங்கில் எண்ணெய் விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியது. அதே சமயம் எண்ணைக்கு பதிலாக கார்டு வைத்திருப்பவர்களின் கணக்கில் மாதம் ரூ.250 அனுப்ப திட்டமிடப்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது இன்னொரு நல்ல செய்தி உள்ளது, அது என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் கிடைக்கும்
இந்த நிலையில் தற்போது அரசாங்கம்  250 ரூபாயை அதிகரிக்க பரிசீலித்து வருகிறது. அதன்படி முன்னதாக அரசு 250 ரூபாய் வழங்கி வந்தது, ஆனால் தற்போது இந்த தொகையை ஹரியானா அரசு ரூ.300 ஆக உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் பலன் BPL மற்றும் AAY ரேஷன் கார்டுகளைக் கொண்ட 32 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். அதன்படி இவர்களுக்கு அரசிடமிருந்து மாதந்தோறும் 300 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் படிக்க | அதானி குறித்து பேசாத பிரதமர்; அவரை காப்பாற்றுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது -ராகுல் காந்தி

பல லட்சம் லிட்டர் எண்ணெய் ஸ்டாக் மிச்சம்
மறுபுறம், அரசாங்கம் 250 ரூபாய் அறிவித்ததில் இருந்து, பயனாளிகளுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை என்று சில ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அரசிடம் பல லட்சம் லிட்டர் எண்ணெய் ஸிடோக்கில் மிச்சமாகியுள்ளது. மேலும் இந்த எண்ணெய் மார்ச் மாதத்தில் காலாவதியாகும் என கூறப்படுகிறது. எனவே உடனடியாக இந்த எண்ணெயை ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்க மாவட்ட உணவு மற்றும் வழங்கல் துறைக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான கார்டுதாரர்களுக்கு கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி ; இந்தியாவில் முதல் முறை - ஆணா, பெண்ணா என்று கேட்டால்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News