இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) குரூப் சி டெக்னீசியன் பதவிக்கு ஆட்சேர்ப்புப் பரீட்சைக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த நவம்பர் 2 ம் தேதி குரூப் சி பரீட்சை முடிவுகளை வெளியிட்டது, ஆனால் சில கேள்விகள் தவறாக கேட்டக்கப்பட்டு இருந்ததாக கூறி எதிர்த்தனர். அதன் பின் ரயில்வே அந்த விவகாரத்தை பரிசீலித்து, அதன் கேள்விகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது. அதன்பின்னர் மீண்டும் குரூப் சி டெக்னீசியன் பதவிக்கான பரீட்சை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகள் அனைத்து இணையதளதில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் ரோல் நம்பருடன் ஒரு பட்டியல் இணைக்கபட்டு உள்ளது. PDF வடிவில் இருக்கும், இந்த பட்டியலில் அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்கள் தரப்பட்டு உள்ளது.
ஒருவேளை நீங்களும், இந்த தேர்வில் கலந்துக்கொண்டு இருந்தால், உங்கள் பகுதிக்கான இணையதளத்திற்கு சென்று உங்களுடைய முடிவுகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
எப்படி உங்கள் தேர்வு முடிவை காணலாம்:
- முடிவுகளைப் பார்க்க முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருகை தரவும். (கீழே அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் பட்டியல் உள்ளது)
- பின்னர் வளைத்தளத்தில் "RRB Group C ALP, Technician Revised Result 2018" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- இந்த லிங்கை கிளிக் செய்த பின், ஒரு PDF கோப்பு திறக்கும், அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் இருக்கும்.
உங்கள் பகுதிக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம்:
RRB மும்பை (www.rrbmumbai.gov.in)
RRB முஸாபர்பூர் (www.rrbmuzaffarpur.gov.in)
RRB பட்னா (www.rrbpatna.gov.in)
RRB ஜம்மு (www.rrbjammu.nic.in)
RRB கொல்கத்தா (www.rrbkolkata.gov.in)
RRB மால்டா (www.rrbmalda.gov.in)
RRB ராஞ்சி (www.rrbranchi.gov.in)
RRB குவஹாத்தி (www.rrbguwahati.gov.in)
RRB செகந்திராபாத் (www.rrbsecunderabad.nic.in)
RRB அகமதாபாத் (www.rrbahmedabad.gov.in)
RRB அஜ்மீர் (www.rrbajmer.gov.in)
RRB அலகாபாத் (www.rrbald.gov.in)
RRB பிலாஸ்பூர் (www.rrbbilaspur.gov.in)
RRB சண்டிகர் (www.rrbcdg.gov.in)
RRB பெங்களூர் (www.rrbbnc.gov.in)
RRB போபால் (www.rrbbpl.nic.in)
RRB சென்னை (www.rrbchennai.gov.in)
RRB புவனேஸ்வர் (www.rrbbbs.gov.in)
RRB கோரக்பூர் (www.rrbguwahati.gov.in)
RRB திருவனந்தபுரம் (www.rrbthiruvananthapuram.gov.in)
RRB சிலிகுரி (www.rrbsiliguri.org)