பயனர்களின் ஆரோக்கியத்தை கருதி PUBG விளையாட நேர கட்டுப்பாடு..

PUBG விளையாட தினமும் 6 மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாதபடி புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது!!

Last Updated : Mar 24, 2019, 03:21 PM IST
பயனர்களின் ஆரோக்கியத்தை கருதி PUBG விளையாட நேர கட்டுப்பாடு..  title=

PUBG விளையாட தினமும் 6 மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாதபடி புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது!!

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் யுகத்தில் பயணித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி (PUBG -playerUnknown's Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது, வரவேற்பு என்பதைக் கடந்து பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இது தொடர்பான செய்தியை நாம் தினமும் பார்க்கிறோம். ஓய்வில்லாமல் PUBG விளையாடிய மாணவர் மனநல பாதிப்பு. PUBG-ல் முழு நேரத்தையும் செலவிடும் மாணவர்கள் என தினமும் ஒரு செய்தி வருகிறது. இந்நிலையில், குஜராத் அரசு PUBG விளையாட்டை தடை செய்துள்ளது. இதை தொடர்ந்து, பப்ஜி வீடியோ கேமை தினமும் 6 மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இந்த தகவல், இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் இன்று 6 மணி நேரம் பப்ஜி விளையாடி விட்டீர்கள். இனி நாளை விளையாட வாருங்கள் என கேமில் வரும் அலெர்ட் மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வருகிறது. இதுபோன்ற கட்டுப்பாடு பப்ஜி கேமுக்கு வந்தால், நிச்சயம் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 

 

Trending News