விலங்குகளை கொண்று அதன் தோல்களில் குளிர்கால ஆடை தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இளைஞர்கள் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியுள்ளனர்!
கெனடாவினை மையமாக கொண்டு இயக்கும் பிரபல குளிர்கால ஆடை தயாரிப்பு நிறுவனம் Canada Goose. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் உற்பத்திக்கு பல உயிரினங்கள் பலியாகவுதாக கூறி, PETA இயக்கத்தை சேர்ந்த அமெரிக்க இளைஞர்கள் 5 பேர் கொண்ட குழு மேலாடை இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
Gloves (and coats) are off! Top pporters take to t streets of New York City to protest Canada Goose's use of coyote fur
Topless protesters rallied Thursday against the outerwear brand Canada Goose
The demonstration took place outside the company's flagship store pic.twitter.com/W1KilslHk4— Darlington Micah (@DarlingtonMicah) October 19, 2018
அமெரிக்காவின் நியுயார்கில் உள்ள Canada Goose நிறுவனத்தின் கிளையில் கடந்த வியாழன் அன்று இந்நிறுவன புதுவரவுகள் குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆர்பாட்டக்காரர்கள் இந்த நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
சம்பவநாள் அன்று Canada Goose நிறுவன கிளைக்கு முன்வந்த ஆர்பாட்டக்காரர்கள் கருமை நிறத்தில் காலாடை மற்றும் பாதணி அணிந்து மேலாடை இன்றி இந்நிறுவனத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி வந்தனர். “Canada Goose Kills” என்ற வாசங்களை கொண்ட பதாகைகளை ஏந்திய இவர்கள் தங்களது உடலில் Fur Kills என்று எழுதிவந்து போராட்டத்தினை நடத்தினர்.
இந்த போராட்டத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.