ஒவ்வொரு உலோகத்தின் பண்புகள் மற்றும் பலன்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. உலோகங்களின் சிறப்புப் பண்புகளால், கிரகங்களின் நிலை சரியாக உள்ளது. தங்கம் அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணம். இது தவிர, ஜாதகரின் கிரக தோஷங்களை நீக்க தங்கம், வெள்ளி அல்லது பிற உலோகங்களில் பல ரத்தினங்களை அணியுமாறு ஜோதிடர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
இங்கு தங்கம் அணிவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும், யாரெல்லாம் அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தில் தங்கம்
ஜோதிட சாஸ்திரத்தில், குருவுக்கும், தங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தங்கத்தின் மீதான குருவின் தாக்கம் என்பது அதிகம். அத்தகைய சூழ்நிலையில், குரு ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பவர்கள் தங்கம் அணியுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். இதன் மூலம் வாழ்க்கையில் செல்வம், பெருமை மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை பெருகும்.
மேலும் படிக்க | karma karagan: ஏழரையா? கண்டச்சனியா? சனி மகாதசை என்றாலும் பரிகாரம் அவசியம்
இந்த ராசிக்காரர்களுக்கு தங்கம் பலன் தரும்
மேஷம்:
இந்த ராசிக்காரர்களுக்கு தங்க மோதிரம் அணிவது நன்மை தரும். தங்கம் அணிந்திருப்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகின்றன. முக்கியமாக கடனில் இருந்து விடுபடலாம்.
சிம்மம்:
இந்த ராசிக்காரர்களுக்கு தங்கம் பலன் தரும். உண்மையில் இந்த ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நட்புறவு இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிய வேண்டும்.
மேலும் படிக்க | பணவரவு, மகிழ்ச்சி பொங்க வீட்டில் எந்த சிலைகளை வைக்க வேண்டும்?
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவதால் நன்மை உண்டு. இந்த ராசிக்காரர்கள் தங்கச் சங்கிலி அணிவதால் அமோக வெற்றி பெறுவார்கள். மேலும், நிதி நிலையும் நன்றாக மேம்படும்.
தனுசு:
இந்த ராசியின் அதிபதி குரு. தங்கம் - குருவுக்கு இடையே சிறப்பான உறவைக் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிவது நல்லது. இதன்மூலம் எந்தவொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள்.
மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்
எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கம் அணியக்கூடாது?
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கம் அணியக்கூடாது. மறுபுறம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்களை அதிக அளவில் அணியக்கூடாது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR