Parenting Tips: உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரின் கண்மணிகள் தான். ஏனென்றால் பெற்றோரைப் போல வேறு யாராலும் குழந்தையை நேசிக்க முடியாது. நீங்களும் உங்கள் குழந்தையை மிகவும் நேசித்து அவரை உங்கள் கண்களை இமை காப்பத்து போல் காக்க வேண்டும். ஆனால் அன்பு அளவிற்கு அதிகமாக ஆவதும், செல்ல கொடுப்பதும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதீத பாசம் என்ற பெயரில் அவர்களடு எதிர்காலத்தை பாழடித்து விடுகிறார்கள் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.. பாசத்தின் பெயரால் நீங்கள் உங்கள் சொந்த குழந்தையில் எதிர்காலத்தை எப்படி பாழாக்குகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதீத அன்பினால் குழந்தை சிந்திக்கும் திறனை இழக்கிறது
அதிகப்படியான செல்லம் காரணமாக இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைளின் சிந்தனை திறனை பாதித்து, அவர்களின் மூளை வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். வெளிநாட்டுப் பெற்றோருடன் ஒப்பிடும் போது, இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கை உணர்வை பெற தடையாக இருப்பதாக உளவியலாளர்கள் (Parenting Tips) கூறுகின்றனர். செல்லம் என்ற பெயரில், வளரும் குழந்தைகளுக்கு தினசரி வேலை முதல் பல வேலைகளை பெற்றோர்களே செய்து விடுகிறார்கள். இதனால் குழந்தைகள், அன்ராட பணிகளை கூட சரியாக கையாளத் தெரியாமல் இருப்பதோடு, தன்னம்பிக்கைக்கான பயிற்சியைப் பெறுவதில்லை.
பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள்
குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது, அவர்கள் ஷூ லேளை கட்டுவது, அவர்கள் அலமாரியைச் சுத்தம் செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் பெற்றோர்கள் தாங்களே செய்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தானே உணவு சாப்பிட, தண்ணீர் எடுத்துக் கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை. இது குழந்தையின் திறனை பாதிக்கிறது. குழந்தைகளுக்கு பொறுப்பு உணர்ச்சியும் ஏற்படாது. இப்படி வளரும் குழந்தை, தன் வேலையை தானே செய்ய முடியும் என்ற, தன்னம்பிக்கை இல்லாமல் போகிறது.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!!
குழந்தைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
குழந்தைகளை திறமைமிக்கவர்களாக வளர்க்க, பெற்றோர்கள் குழந்தைகள் தங்கள் வேலையை, தாங்களே செய்து கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஷூவை தானே அணிதல், தண்ணீரை எடுத்து செல்வது, தானே உணவு உண்பது, தன்னுடைய அறை மற்றும் அலமாரியை சுத்தம் செய்வது, இவற்றையெல்லாம் குழந்தை படிப்படியாக தானே செய்ய வேண்டும். ஒரு எட்டு வயது குழந்தை இவற்றையெல்லாம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் பொறுப்பானவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் வளருவார்கள்.
அறிவுத் திறன் நன்றாக வளர செய்ய வேண்டியவை
குழந்தைகளுக்கு அவர்களுடைய வேலையைச் தாங்களே செய்யக் கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர் சிந்தனைத் திறன், அறிவுத் திறன் நன்றாக வளரும். இது அவரது வாழ்க்கை முறை திறன்களை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு நீங்கள் ஆடைகளை அணிவிப்பதற்கு பதிலாக, ஆடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள். தங்கள் வேலையை தாங்களே செய்வதன் மூலம் குழந்தை பல விஷயங்களை கற்றுக் கொள்ளும். இதனால், அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ