முதுமை காலத்தில் யாரையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. அதற்காக முன்கூட்டியே திட்டமிடத் தொடங்க வேண்டும். உங்கள் வேலை தொடங்கும் நாளில் இருந்தே ஓய்வுக்கான பணத்தைச் சேமிக்கத் தொடங்க வேண்டும். உண்மையில், எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமான பணம் ஓய்வு காலத்தில் கிடைக்கும். EPF, NPS, பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள், ரியல் எஸ்டேட் போன்ற பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஓய்வூதியம் பெற ஏதுவாக, நாம் முதலீடு செய்யக்கூடிய பல திட்டங்களை மத்திய அரசு தொடக்கியுள்ளது. நீங்கள் ஓய்வு பெறும்போது, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஒரு பெரிய தொகையைப் பெற, இன்றிலிருந்தே முதலீடு செய்ய வேண்டும். இதன்மூலம் உங்கள் முதுமை காலம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
NPS திட்டம்
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) என்பது அரசு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஈக்விட்டி மற்றும் டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் இரண்டையும் கொண்டுள்ளது. NPS மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும். ஓய்வுக்குப் பிறகு அதிக மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற நீங்கள் NPS திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!
வருமான வரி விலக்கு
NPS ஓய்வூதியத் திட்டமானது பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற அரசாங்கத் திட்டமாகும். இதில், எந்தவொரு முதலீட்டாளரும் முதிர்வுத் தொகையை சரியாகப் பயன்படுத்தி தனது மாதாந்திர ஓய்வூதியத் தொகையை பெருக்கலாம். என்பிஎஸ் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரியையும் சேமிக்கலாம். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். நீங்கள் NPS திட்டத்தில் முதலீடு செய்தால், 50,000 ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.
மாதம் ₹64,000 ஓய்வூதியம்
NPS திட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால், உங்களுக்கு 1.91 கோடி கிடைக்கும். இதற்குப் பிறகு, முதிர்வுத் தொகையை சிறப்பாக முதலீடு செய்தால், 2 லட்சம் மாதாந்திர வருமானத்தை பெறலாம். இதன் கீழ், முறையான திரும்பப் பெறுதல் திட்டத்திலிருந்து (SWP) நீங்கள் ரூ.1.43 லட்சம் பெறுவீர்கள். மேலும், ரூ.63,768 மாதாந்திர வருவாயைப் பெறுவீர்கள். இதில், முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை ஆண்டுத் தொகையில் இருந்து ரூ.63,768 மாத ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும்.
மேலும் படிக்க | Jackpot! பழைய அரிய ‘ரூபாய் நோட்டுக்களை’ விற்று லட்சாதிபதியாக ஆவது எப்படி..!!
ஓய்வூதியம் ரூ.63,768
20 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ 5000 முதலீடு செய்தால், 1.91 கோடி முதல் 1.27 கோடி வரை மொத்த முதிர்வுத் தொகையைப் பெறுவீர்கள். இதற்குப் பிறகு, ரூ.1.27 கோடியில் 6% வருமானத்துடன் மாதம் ரூ.63,768 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.
NPS திட்டத்தில் இரண்டு வகைகள்
NPS திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன, NPS அடுக்கு 1 மற்றும் NPS அடுக்கு 2. டயர்-1 திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500, டயர்-2 திட்டத்தி ரூ.1000. இருப்பினும், முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. NPS திட்டத்தில் மூன்று முதலீட்டு விருப்பங்கள் உள்ளன, அதில் முதலீட்டாளர் தனது பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈக்விட்டி, கார்ப்பரேட் கடன் மற்றும் அரசுப் பத்திரங்கள். பங்குகளில் அதிக தொகையை முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும். எனினும், உங்கள் முதலீட்டு ஆலோசகரிடம் பேசிய பின்னரே எந்த முதலீட்டையும் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ