ஒரே மொபைல் எண் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC Aadhaar Card-ஐ பெறலாம்: வழிமுறை இதோ

நமது நாட்டில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகின்றது. ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் ஒரு முக்கிய ஆவணமாகும். இது இல்லாமல், நம்மால் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் பெற முடியாது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2021, 04:31 PM IST
  • ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் ஒரு முக்கிய ஆவணமாகும்.
  • PVC ஆதார் அட்டையை உருவாக்கிக்கொள்ள வெறும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு PVC ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படும்.
ஒரே மொபைல் எண் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC Aadhaar Card-ஐ பெறலாம்: வழிமுறை இதோ title=

Aadhaar Card Update: நமது நாட்டில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகின்றது. ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் ஒரு முக்கிய ஆவணமாகும். இது இல்லாமல், நம்மால் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் பெற முடியாது. காலப்போக்கில் ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த ஆண்டு PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்தது. இதை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் இதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். 

PVC ஆதார் அட்டையை பெறுவது எப்படி
இதுவரை ஆதார் அட்டை (Aadhaar Card) காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்துகொண்டிருந்தது. ஆனால் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்துக்கும் UIDAI ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ஆதார் அட்டையை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஆதார் அட்டைக்கு பிசிக்கல் அட்டையைப் போலவே அனைத்து அங்கீகாரமும் உள்ளது.

50 ரூபாயில் PVC ஆதார் அட்டையை பெறலாம் 
இதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், இப்போது ஒரே ஒரு மொபைல் எண்ணுடன் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் அட்டையை உருவாக்கிவிடலாம். PVC ஆதார் அட்டையை பராமரிப்பது மிகவும் எளிதானதாகும். இது பிளாஸ்டிக்கில் இருப்பதால் இதை வைத்திருப்பது எளிதாகிறது. இதன் அளவு ஏடிஎம் டெபிட் கார்டு போன்றுதான் இருக்கும். அதை எளிதாக உங்கள் பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக்கொள்ளலாம். PVC ஆதார் அட்டையை (PVC Aadhaar Card) உருவாக்கிக்கொள்ள வெறும் 50 ரூபாய் என்ற சிறிய கட்டணத்தை செலுத்தினால் போதும். 

PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி
1. நீங்கள் பி.வி.சி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால்,  UIDAI வலைத்தளமான uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்தில் அதை செய்யலாம்.
2. உங்கள் ஆதார் அட்டை எண், மெய்நிகர் அடையாள எண் (Virtual ID Number) அல்லது பதிவு எண் ஆகியவற்றை இணையதளத்தில் உள்ளிட வேண்டும்.
3. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி இதை ஆர்டர் செய்ய வெண்டும். சில நாட்களுக்குப் பிறகு அது உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ALSO READ: வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு good news: இனி Aadhaar Card-ல் ஆன்லைனிலேயே முகவரியை மாற்றலாம்

உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்படாவிட்டால் எவ்வாறு விண்ணப்பிப்பது
உங்கள் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், அந்த நிலையிலும், நீங்கள் பி.வி.சி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, இந்த வழியை பின்பற்ற வேண்டும்.
1. https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint இன் வலைத்தளத்துக்கு செல்லவும்
2. உங்கள் ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யுங்கள்
3. பாதுகாப்பு குறியீட்டை நிரப்பவும். 'my mobile not registered' அதாவது 'என் மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 
4. பாதுகாப்புக் குறியீட்டை நிரப்பி, 'my mobile not registered' அதாவது 'என் மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்ற பெட்டியில் டிக் செய்யவும்.
5. உங்கள் மொபைலில் வந்த OTP ஐ உள்ளிடவும்
6. ரூ .50 கட்டணத்தை செலுத்தியவுடன் உங்கள் விண்ணப்பம் நிறைவடையும். 

பி.வி.சி ஆதார் அட்டை வழக்கமாக ஆன்லைனில் விண்ணப்பித்த இரண்டு வாரங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ALSO READ: Aadhaar-Mobile Link: அலட்சியம் வேண்டாம்; இன்றே செய்யவும்; அதற்கான எளிய முறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News