ஆச்சரியம்: முகத்தில் தாடி வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

இன்று, ஆண்களின் தாடி தோற்றம் பொதுவானதாகிவிட்டது. எல்லோரும் இப்போதெல்லாம் ஒரு தாடியுடன் சுற்றி வருவது வழக்கமாகிவிட்டது. தாங்கள் கொண்டுள்ள தாடி தங்களது தோற்றத்தை தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் கான்பிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

Last Updated : Aug 27, 2019, 04:26 PM IST
  • தாடி வைத்திருப்பது பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது
  • தாடி மீசை காரணமாக முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைகின்றன. தோல் ஈரப்பதமாகி இளமையை நீட்டிக்கிறது. முதுமையை தாமதமாக எட்டச் செய்கிறது.
  • முக பொளிவிற்கு நாம் பயன்படுத்து முகப்பூச்சு, சாயங்கள் என பலவும் முக சருமத்தை காயப்படுத்தும்.
ஆச்சரியம்: முகத்தில் தாடி வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா? title=

இன்று, ஆண்களின் தாடி தோற்றம் பொதுவானதாகிவிட்டது. எல்லோரும் இப்போதெல்லாம் ஒரு தாடியுடன் சுற்றி வருவது வழக்கமாகிவிட்டது. தாங்கள் கொண்டுள்ள தாடி தங்களது தோற்றத்தை தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் கான்பிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் தாடி வைத்திருப்பது பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

தாடி முகத்தில் ஒரு தடுப்பு மற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும் பலவிதமான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. உங்களுக்கு இன்னும் புரியாவிட்டார்., கீழ் காணும் உதாரணங்களை கவனியுங்கள்..

நீங்கள் முகத்தில் முழு தாடியைக் கொண்டிருக்கும்போது சூரியனின் 95% புற ஊதா கதிர்கள் உடலில் பாயாமல் தடுக்கப்படுகிறது. இந்த புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயையும் ஏற்படுத்தும் திறன் படைத்தது. அந்த வகையில் தாடி சருமத்தின் இரட்டை பாதுகாப்பை செய்கிறது.

கோடை மற்றும் குளிர் காலங்களில் இருந்து நம்மை பாதுகாப்பதில் தாடி திறம்பட பல வேலைகளை செய்கிறது. குளிர்காலத்தில் முகத்தை சூடாக வைத்திருப்பதன் மூலம் தாடி நமக்கு மிகவும் பயன் அளிக்கிறது. அதேபோல் குளிர்ந்த காற்று நேரடி முகத்தை எட்டாத வண்ணன் நம்மை பாதுகாக்கிறது. பழங்காலங்களில், முனிவர், யோகிகள் தாடி மற்றும் மீசையை வைத்திருந்தது இதனால் கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

தாடி மீசை காரணமாக முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைகின்றன. தோல் ஈரப்பதமாகி இளமையை நீட்டிக்கிறது. முதுமையை தாமதமாக எட்டச் செய்கிறது.

முகத்தில் தாடியுடன் சுற்றும் ஆண்கள் முகத்தில் நேரடி வான் தாக்குதல் நிகழ்வதில்லை மற்றும் அவர்களின் முகம் கரடுமுரடானதா மாறுவதில்லை. எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். தோல்களுக்கு முகமூடியாய் அமைந்து வறட்சி வராது காக்கிறது.

பாக்டீரியாக்கள் பலவிதமான தொற்றுநோய்களைத் தருகின்றன. நம்மை தாக்கும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் முடி வேர்களில் கூட தங்கள் வீட்டை உருவாக்குகின்றன. இது சருமத்தில் கருப்பு புள்ளிகள் போல் தோற்றத்தை உண்டாக்குகிறது. முகத்தில் முடிகளை வளர்ந்தால், அத்தகைய பாக்டீரியாக்களை அழித்து விடும்.

முக பொளிவிற்கு நாம் பயன்படுத்து முகப்பூச்சு, சாயங்கள் என பலவும் முக சருமத்தை காயப்படுத்தும். முகத்தில் வளரும் தாடி இந்த காயங்களை கட்டுப்படுத்த உதவும். மேலும் பல பயன்கள் தாடியால் கிடைப்பதால் தாடி வளர்க்கும் ஆண்களை ஊக்குவிப்போம்...

Trending News