கின்னஸ் சாதனையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி விழா கின்னஸ் சாதனையாக இடம்பிடித்தது.

Last Updated : Mar 3, 2019, 11:21 AM IST
கின்னஸ் சாதனையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா! title=

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி விழா கின்னஸ் சாதனையாக இடம்பிடித்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி 8.45 மணிவரை நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். கின்னஸ் உலக சாதனை பதிவு அதிகாரி இங்கிலாந்தை சேர்ந்த ரிஷிநாத் கலந்து கொண்டு உலக சாதனையில் இதனை பதிவு செய்தார். கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

Trending News