National Girlfriend Day: தேசிய கேர்ள் பிரண்ட் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அதாவது, உறுதியான காதல் உறவுகளில் உள்ளவர்களால் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், அன்பையும், அசைக்க முடியாத ஆதரவோடு ஆரோக்கியமான தோழமையுடனும் பெண்களை கொண்டாடுவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தங்கள் தோழிகளிடம் நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்து, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, அர்த்தமுள்ள பரிசுகளை வழங்கி மற்றும் பலவற்றைக் கொடுத்து அவர்களை இந்த தினத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த தேசிய கேர்ள் பிரண்ட் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த நாளை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து இங்கே காணலாம். .
வரலாறும் முக்கியத்துவமும்
தேசிய கேர்ள் பிரண்ட் தினம் எப்போதிருந்து கடைபிடிக்கப்படுகிறது அல்லது கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் அதுகுறித்த தெளிவான வரலாறு இல்லை. ஏனெனில் இது சமூக ஊடக தளங்கள் மற்றும் அவர்களின் காதல் ஜோடிகளை சிறப்புற உணர வைக்கும் மக்களின் கனவு முயற்சிகள் மூலம் வெளிப்பட்டதாகவே தெரிகிறது.
மேலும் படிக்க | கணவனிடம் இந்த மூன்று விஷயங்களை செய்யாதீர்கள்... மனைவிகளுக்கு சில டிப்ஸ்!
இந்த தினம், காதலர்கள் தங்கள் காதலிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் குறிப்பிடத்தக்க பிணைப்பைக் கொண்டாட ஊக்குவிக்கிறது. அன்பான பழக்கவழக்கங்கள், சிந்தனைமிக்க பரிசுகள் மூலம் தங்கள் காதலி மீது காதலர்கள் மனப்பூர்வமான பாராட்டுகளை வெளிப்படுத்துகிறார்கள். காதலர்கள் பொதுவாக, இந்த தேசிய கேர்ள் பிரண்ட் தினத்தை தங்கள் காதலிகளுடன் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், உங்களின் சிறந்த பெண் நண்பர்கள், ஆத்மார்த்தமான தோழிகளையும் இந்த தினத்தில் நீங்கள் கொண்டாடலாம்.
இந்த தினத்தின் அடிப்படையே, கடினமான காலங்களில் உங்களுக்குத் துணையாக நிற்கும் குறிப்பிடத்தக்க பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் அசைக்க முடியாத ஊக்கத்தை வழங்குவதே ஆகும்.
கொண்டாட்டங்கள்
தேசிய தோழிகள் தினத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மரபுகள் அல்லது பழக்கவழக்கங்கள் என்று எதுவும் இல்லை. இந்த நாள் அன்பு மற்றும் பாராட்டு ஆகியவற்றின் தனிப்பட்ட வெளிப்பாடுகளைப் பற்றியது. தனிநபர்கள் அவர்கள் மற்றும் அவர்களது காதலிகளுடன் பகிரப்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான வழிகளில் அதைக் குறிக்கலாம்.
இதற்கிடையில், உங்கள் துணையுடன் தேசிய கேர்ள் பிரண்ட் தினத்தை கொண்டாட சில யோசனைகள் இங்கே உள்ளன. அவர்களை இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் செல்லுங்கள் அல்லது வீட்டில் நீங்களே சமையல் செய்யுங்கள், சர்ப்ரைஸ்களை திட்டமிடுங்கள், அவர்களுக்கு அர்த்தமுள்ள பரிசுகளை கொடுங்கள், அவர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களுக்கோ அல்லது நிகழ்ச்சிக்கோ செல்லுங்கள், நீங்கள் தொலைதூரத்தில் இருப்பவராக இருந்தால் அன்றைய நாளை வீடியோ அழைப்பில் செலவிடுங்கள், சாலைப் பயணம், திரைப்பட மராத்தான்கள் மற்றும் பலவற்றைத் திட்டமிடுங்கள்.
மேலும் படிக்க | பெண்களின் இதயத்தில் பட்டுனு இடம்பிடிக்கனுமா... ஆண்களுக்கு இந்த 5 குணங்கள் அவசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ