2023 முடிவதற்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பாக செய்து விடுங்கள்!

Must Do Things Before New Year 2024: இந்த வருடம் முடிய இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன. இந்த நிலையில், வருட இறுதிக்குள் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 22, 2023, 03:39 PM IST
  • புது வருடம் விரைவில் பிறக்க போகிறது.
  • இந்த வருடம் செய்வதற்கு முன்னர் செய்ய வேண்டிய விஷயங்கள்.
  • இதை செய்தால் வாழ்க்கையில் மாற்றம் வரும்.
2023 முடிவதற்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பாக செய்து விடுங்கள்! title=

2023 ஆம் ஆண்டின் முடிவு நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னொரு புதிய ஆண்டை எதிர்நோக்கி அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். கடந்த 12 மாதங்களில் நாம் மேற்கொண்ட பயணத்தை பிரதிபலிக்கும் நேரம் வந்து விட்து. இந்த ஆண்டு முடிவதற்குள் நாம் கண்டிப்பாக சில விஷயங்களை செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 

1.தனிப்பட்ட வளர்ச்சி:

இந்த ஆண்டு நீங்கள் கடந்து வந்த பாதையை அப்படியே திரும்பி பாருங்கள். தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் செய்த மாற்றங்களை அப்படியே அசை போடுங்கள். தோல்விகளில் இருந்தும் வெற்றிகளில் இருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களை ஏற்றுக்கொக்ள்ளுங்கள். இது, ஒரு தனிப்பட்ட மனிதராக நீங்கள் பன்மடங்கு உயர உதவும். 

2.சாதனைகள்:

2023ஆம் ஆண்டின் 12 மாதங்களில் நீங்கள் கடந்து வந்த பாதையையும், நீங்கள் அடைந்த வெற்றிகளையும் திரும்பி பாருங்கள். அது எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும் எவ்வளவு சிறிய வெற்றியாக இருந்தாலும் உங்களை நினைத்து நீங்களே பெருமை கொள்ளுங்கள். இவையனைத்தையும் உங்களுடையது என நினைத்து கொண்டாடுங்கள். 

3.உறவுகள்:

இந்த ஆண்டில் உங்களுக்கு சில புதிய உறவுகள் கிடைத்திருக்கும். பல பழைய உறவுகள் உங்களை கடந்து சென்றிருக்கும். எனவே, அவை அனைத்தையும் திரும்பி பாருங்கள். விட்டுப்போனவர்களை எண்ணி வருந்தாமல், கிட்ட இருப்பவர்களை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஏதேனும் ஒரு தருணத்தில் உங்களை மகிழ்வித்திருப்பர். அதை நினைத்து புன்முறுவல் செய்யுங்கள். கடினமான தருணத்தில் உங்களுடன் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். 

4.உடல் நலம்:

இந்த ஆண்டில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கவும். உங்கள் வாழ்வியல் நடைமுறையில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளீர்களா என்பதை கண்டுபிடியுங்கள். அப்படி ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது உங்கள் உடல் நலனை எந்த மாதிரி மாற்றியுள்ளது என்பதை கவனியுங்கள். அப்படி எந்த மாற்றமும் இல்லை என்றால், இனி அதை எப்படி வாழ்வில் கொண்டு வரலாம் என யோசியுங்கள். உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொண்டீர்களா என்பதையும் சரிபாருங்கள். 

5.இலக்குகள்:

இந்த ஆண்டின் தொடக்கத்திலோ, அல்லது இடையிலோ ஏதேனும் செய்து முடிக்க வேண்டும் என்று இலக்கை வைத்திருப்பீர்கள். அந்த இலக்கை ஏற்கனவே எட்டிவிட்டீர்களா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால், அதை செய்து முடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போதே ஆரம்பியுங்கள். உங்கள் இலக்குகளை எட்ட, தினசரி வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்.

மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!

6.நன்றியுணர்வு:

கிடைக்காததை நினைத்து வருந்துவதைவிட, கிடைத்த விஷயங்களை நினைத்து ஆனந்தம் கொள்வது மேல் என வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் பலர் கூறுவதுண்டு. அதனால், இதுவரை உங்களுக்கு கிடைத்த விஷயங்களை நினைத்து பெருமைக்கொள்ளுங்கள். இது, உங்களுக்கு அடுத்த வருடத்தை இனிதுடன் தொடங்குவதற்கான பாசிடிவான மனநிலையை அளிக்கும். 

7.எதிர்காலத்தை காட்சி படுத்துதல்:

இந்த ஆண்டு முடிவுக்கு வரும்போது, சுய விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையை தேர்ந்தெடுங்கள். வரவிருக்கும் ஆண்டிற்கான உங்கள் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களளை அழைத்துக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் வாழ்க்கை பயணத்தில் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். எதுவும் என்றென்றும் நீடிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இனி வரும் காலங்களில் எவ்வாறு இருக்க நினைக்கிறீர்கள் என்பதை மட்டும் காட்சிப்படுத்த முயற்சி செய்யுங்கள். 

மேலும் படிக்க | அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News