ஏலியனை போல் காது, மூக்கு & பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண்.....

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் பிறப்புறுப்பையும் நீக்குகிறார்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2018, 07:19 PM IST
ஏலியனை போல் காது, மூக்கு & பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண்..... title=

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் பிறப்புறுப்பையும் நீக்குகிறார்....

இளைஞர்கள் அனைவரும் தற்போது மற்றவர்களை விட தங்களை வேருபடுத்திக் காட்டவே விரும்புகின்றனர். இதில் சிலர் தங்களுக்கென பல அடையாளங்களை அமைத்துக்கொள்ள அபாயகரமான உத்திகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொள்வது, மூக்கு, காது போன்ற உறுப்புகளில் வளையங்கள் மாட்டிக்கொள்வது என பல வகைகள் இதில் உள்ளன.

பலர் இவ்விஷயங்களில் கொஞ்சம் சீரியஸாக போய் விடுகின்றனர். கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயதான எரிக் ராமிரெஸ் (Erick Hincapie Ramirez) என்பவரும் அதில் ஒருவர். தனது 12-வயதில் தாயை இழந்த எரிக், அதன் பின்னர் உடல் முழுவதும் விதவிதமாக டாட்டூ வரைந்து கொண்டார். 

உச்சகட்டமாக மனித மண்டை ஓடு போல தனது முகத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பி, மூக்கு மற்றும் இரண்டு காதுகளை அறுத்து எடுத்துள்ளார். மண்டை ஓட்டின் வாய் பகுதியில் பற்கள் வெளிப்படையாக இருப்பது போல தனது வாயை சுற்றிலும் அதற்கேற்ப டாட்டூ போட்டுக்கொண்ட எரிக், விரைவில் தனது பிறப்புறுப்பையும் நீக்க இருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“என்னைப் பார்த்து பயப்படுபவர்களை காணும் போது சிரிப்பாக இருக்கும். என்னுடைய தோற்றம் தான் மாறுபட்டுள்ளதே தவிர, நானுன் சாதாரணமானவன்” என்று கூறும் எரிக்கிறகு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News