மகா சிவராத்திரி 2019: பூஜை செய்யும் நேரம்; திதி, விதி மற்றும் ஜாமம் -முழுவிவரம்

2019 மகா சிவராத்திரி நாளான இன்று எத்தனை மணிக்கு பூஜை செய்ய வேண்டும், திதி மற்றும் விதி குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 4, 2019, 10:39 AM IST
மகா சிவராத்திரி 2019: பூஜை செய்யும் நேரம்; திதி, விதி மற்றும் ஜாமம் -முழுவிவரம் title=

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. அந்த வகையில் இன்று இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது மகா சிவராத்திரி.

இன்று மகா சிவராத்திரி விழா என்பதால் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்கு உரிய நாள் என்று கூறுவது வழக்கம். இந்த வருடம் மகா சிவராத்திரியும் திங்கட்கிழமை வந்துள்ளதால் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக அமைத்துள்ளது. 

2019 மகா சிவராத்திரி நாளான இன்று எத்தனை மணிக்கு பூஜை செய்ய வேண்டும், திதி மற்றும் விதி குறித்து பார்ப்போம்.

மகா சிவராத்திரி 2019 திதி:

பஞ்ஜாகத்தின்படி, சதுர்தாஷி திதி இன்று(திங்கள்) 4 ஆம் தேதி காலை 04:28 மணிக்கு தொடங்குகிறது. இரவு 07:07 மணிக்கு முடிவடைகிறது.

மகா சிவராத்திரி 2019 பூஜை நேரம்:

மஹாசிவராத்திரிக்கு பூஜை செய்ய சிறந்த நேரம் நிஷிகந்த் கால் பூஜை நேரமாகும். சிவபெருமான் பூமியில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த நேரத்தில்(நிஷிகந்த் கால்) பூஜை செய்வது மிகவும் சிறப்பாகும். 

இந்த ஆண்டு, நிசிதா கால் பூஜை நேரம் மார்ச் 04 அதிகாலை 12:08 முதல் மார்ச் 5 அதிகாலை 12:57 மணி வரை இருக்கும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பூஜை மேற்கொள்ளலாம்.

மகா சிவராத்திரி 2019 பூஜை செய்யும் முறை:

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம்.

மகா சிவராத்திரி 2019 நான்கு ஜாமம்:

முதல் ஜாமம்= மார்ச் 04 அன்று மாலை 06:19 முதல் இரவு 09:26 மணி வரை 

இரண்டாம் ஜாமம்= மார்ச் 04 அன்று இரவு 09:26 மணி முதல் மார்ச் 05 அதிகாலை 12:33 வரை

மூன்றாம் ஜாமம்= மார்ச் 05 அதிகாலை 12:33 முதல் காலை 3.39 மணி வரை

நான்காம் ஜாமம்= மார்ச் 05 காலை 3.39 மணி முதல் காலை 06.46 வரை.

Trending News