உங்கள் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு தேவையான அத்தியாவசிய ஆவணங்களில் ஓட்டுநர் உரிமமும் ஒன்றாகும். டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான புதிய விதிமுறைகள் அமலாகியுள்ளன. உங்கள் ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால், இப்போது நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் (RTO) செல்ல வேண்டியதில்லை. இப்போது நீங்கள் வீட்டில் இருந்த படியே ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் பெறலாம்.
பல இடங்களில், அரசு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து, அடையாளச் சான்றாக ஓட்டுநர் உரிமமும் தேவைப்படுகிறது. உங்கள் அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டாலோ அல்லது சில காரணங்களால் சேதம் அடைந்தாலோ, அதனை மீண்டும் பெற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் அதன் நகலை பெறலாம்.
உங்கள் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், முதலில் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமம் மிகவும் பழையதாகிவிட்டாலோ, அது தெளிவாகத் தெரியாமலோ அல்லது கிழிந்துவிட்டாலோ, நீங்கள் அசல் பிரதியை நகல் எடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை
1. முதலில் போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு செல்லவும்.
2. இப்போது கோரப்பட்ட விவரங்களை இங்கே நிரப்பவும்.
3. இதற்குப் பிறகு, LLD படிவத்தை நிரப்பவும்.
4. இப்போது அதை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
5. இதனுடன், உங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
6. இப்போது இந்த படிவத்தையும் அனைத்து ஆவணங்களையும் ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இது ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்.
7. ஆன்லைன் செயல்முறை முடிந்த 30 நாட்களுக்குப் பிறகு டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம் உங்களிடம் வந்து சேரும்.
டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெற ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, உங்களுக்கு அசல் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆர்டிஓ, செல்லுங்கள். இங்கே நீங்கள் LLD படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இந்தப் படிவத்துடன், துறை நிர்ணயித்த கட்டணத்தையும் செலுத்தவும்.
இந்த முழு செயல்முறைக்குப் பிறகு, நீங்கள் 30 நாட்களில் டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவீர்கள்.
நகல் ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் செயல்முறைக்குப் பிறகு அதற்கான ரசீது உஙக்ளுக்கு கிடைக்கும். இதனை பத்திரப்படுத்திக் வைக்கவும். டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் வரும்போது உங்களுக்குத் தேவைப்படும் அல்லது டூப்ளிகேட் DL வருவதில் தாமதம் ஏற்பட்டால், அந்த ரசீதின் மூலம் அலுவலத்தை அணுகலாம்.
ALSO READ | DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR