GOA-வில் மதுக்கு தடை: மீறினால் 3 மாதம் சிறை, ₹ 2,000 அபராதம்...

கோவாவில்  பொது இடங்களில் மது அருந்துபவர்க்கு 3 மாத சிறை, ரூ 2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.....  

Last Updated : Jan 25, 2019, 10:18 AM IST
GOA-வில் மதுக்கு தடை: மீறினால் 3 மாதம் சிறை, ₹ 2,000 அபராதம்...  title=

கோவாவில்  பொது இடங்களில் மது அருந்துபவர்க்கு 3 மாத சிறை, ரூ 2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.....  
 
கோடை காலம் என்றாலும் மழைகாலம் என்றாலும் மக்கள் விடுமுறை என்றாலே சுற்றுலாவிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் கோவா செல்வார்கள். கோவாவில், எப்போதும் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். 

கோவா என்றாலே கடற்கரை, குடி, குத்தாட்டம் என்றுதான் பலரின் மனநிலை. தற்போது, கோவா முதலவர் கோவா மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிர்ணயித்து வருகிறார். இந்நிலையில், சில முக்கிய கட்டுப்பாடுகளை விதிக்க கோவா அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது பொது இடங்களில் சமைத்தாலோ ரூ.2000 அபராதம் விதிக்கும் புதிய சட்டவிதிக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் இவ்விதிக்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மனோகர் அகனேக்கர் கூறுகையில்,  பொது இடமான கடற்கரையை தங்களின் சொந்த கடற்கரை போல பலரும் பயன்படுத்துகின்றனர். மது அருந்துகின்றனர், பாட்டிலை பொது இடங்களில் உடைக்கின்றனர், வெட்டவெளியில் சமைக்கின்றனர். இவற்றை தடுக்கவே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது. இனி பொது இடங்களில் சமைக்கவோ, மது அருந்தவோ முடியாது. விதியை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும். தவறினால் 3 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும். ஒரு குழுவாக சட்டத்தை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, தெரிவித்துள்ளார். 

சட்டத்தை மீறுபவர்களில் புகைப்படங்கள் சுற்றுலாத்துறையின் சிறப்பு தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டு 12 மணி நேரத்துக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

 

Trending News