பென்சன் வாங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தான் ஜீவன் பிரமான் பத்திரம் அல்லது டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். எனவே ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்திற்கு ஓய்வூதியத்திற்கான ஆயுள் சான்றிதழ் தேவைப்படுவதால், வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு எளிதாக உருவாக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில எளிய முறைகளை பரிந்துரைத்துள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
ஃபேஸ் ஆதென்டிகேஷன் மூலம் லைப் சர்டிபிகேட் உருவாக்கும் செயல்முறை
* ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் 5 மெகாபிக்சல் கேமராவை இணையத்துடன் பயன்படுத்தவும்.
* ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்திருக்கவும்
* AadharFaceRd பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
* https://jeevanpramaan.gov.in/package/download இலிருந்து ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆதென்டிகேஷனை பதிவிறக்கவும்
* அதன் பிறகு ஆபரேட்டர் அங்கீகாரம் மற்றும் ஆபரேட்டரின் முகத்தை ஸ்கேன் செய்யுங்கள்
* ஓய்வூதியம் பெறுவோர் உங்கள் விவரங்களை நிரப்பவும்
* ஃப்ரண்ட் கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும்
மேலும் படிக்க | ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!
How to get Jeevan Pramaan through Face Authentication?#EPFO #SocialSecurity #AmritMahotsav #FaceAuthentication #easeofliving2022 pic.twitter.com/nw8f0oP9pX
— EPFO (@socialepfo) December 29, 2022
ஜீவன் பிரமான் ஆப் தவிர வேறு என்ன முறைகள் உள்ளன?
டோர்ஸ்டெப் பேங்கிங் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் ஓய்வூதியம் பெறுபவர் தனது DSLஐ டெபாசிட் செய்யலாம். இந்த சேவையை முன்பதிவு செய்ய, கட்டணமில்லா எண்களை அழைக்கலாம்- 18001213721, 18001037188 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இந்த சேவைக்கு முன்பதிவு செய்யலாம். இது தவிர, யுஐடிஏஐயின் ஆதார் சாப்ட்வேர் மூலம் ஃபேஸ் ஆதென்டிகேஷன் டெக்னோலாஜி மூலம் தங்கள் லைப் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கலாம்.
மேலும் படிக்க | ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ