LIC-யில் 590 காலி பணியிடங்கள்! விண்ணப்பித்துவிட்டீரா?...

LIC நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) பணியிடங்களை நிரப்ப தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

Last Updated : Mar 3, 2019, 02:35 PM IST
LIC-யில் 590 காலி பணியிடங்கள்! விண்ணப்பித்துவிட்டீரா?... title=

LIC நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) பணியிடங்களை நிரப்ப தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் licindia.in என்ற LIC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்.... மொத்த காலி பணி இடங்கள் 590 
தேர்வு தொடர்பான முக்கிய தேதிகள்...

  • விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் மார்ச் 2, 2019 
  • விண்ணப்பப் பதிவுக்கு கடைசி நாள் மார்ச் 23, 2019 
  • முதல்நிலை தேர்வுக்கு கால் லெட்டர் பதிவிறக்கம் செய்ய அவகாசம் ஏப்ரல் 22-30, 2019 
  • ஆன்லைனில் முதல்நிலை தேர்வுக்கான உத்தேச தேதி மே 4-5, 2019 
  • ஆன்லைனில் முக்கியத் தேர்வுக்கான உத்தேச தேதி ஜூன் 28, 2019 

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்; அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.600
கட்டணம் செலுத்தம் வழிகள்: ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், IMPS, கேஷ் கார்டுகள் / மொபைல் வாலெட் ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தலாம். 

தேர்வு நடைபெறும் முறை: மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

  • முதல் நிலைத் தேர்வு (Prelims) 
  • முக்கிய தேர்வு அல்லது மெயின் தேர்வு (Mains) 
  • நேர்முகத் தேர்வு (Interview) 

Trending News