புதுடெல்லி: நீங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அல்லது ஏற்கனவே வாங்கியிருந்தால், அதற்காக வாகன காப்பீட்டு பாலிசியை எடுத்துக்கொள்வது கட்டாயம். ஏதேனும் விபத்து, திருட்டு தொடர்பான செலவுகளை ஈடுசெய்வதால், அதற்கான செலவில் இருந்து தப்பிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில் வாகன காப்பீட்டு பாலிசியில் செய்யப்படும் சில்ல கிளைம்கள் நிராகரிக்கப்படுகிறது. பாலிசியை வாங்கும் போது தேவையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். பாலிசியின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ளாததால், ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் கோரிக்கையை நிராகரிக்கலாம்.
கார் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் சில நிபந்தனைகள் உண்டு. இதன் கீழ் காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் கார் காப்பீட்டு தொடர்பாக கிளைமை ஏற்றுக் கொள்ளும். கிளைம் அங்கீகரிக்கப்படாவிட்டால், சேதமடைந்த காரை சரிசெய்ய உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் செலுத்த வேண்டியிருக்கும் குறிப்பிடத்தக்கது
தனியார் வாகனத்தை வணிகத்திற்காக பயன்படுத்துதல்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வணிக வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை மற்றும் சட்டங்கள் வேறுபட்டவை. இந்நிலையில், நீங்கள் உங்கள் தனிப்பட்ட காரை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் போது, விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் கிளைமை நிராகரிக்கலாம்.
ALSO READ | வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்
காரை மாடிஃபை செய்தல்
பாலிசி காலத்தின்போது உங்கள் காரில் மாடிபிகேஷன் ஏதும் செய்திருந்தால், அல்லது புதிய பாகங்கள் ஏதேனும் பொருத்தப்படிருந்தால், பாலிசியைப் புதுப்பிக்கும் போது கண்டிப்பாக காப்பீட்டாளரிடம் தெரிவிக்கவும். காப்பீட்டு நிறுவனம், தேவைப்பட்டால், அதனை கவர் செய்யும் வகையில் பிரீமியத்தை வசூலிக்கும். எனவே காப்பீடு செய்யும் போது இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளவும்.
ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டுவது சட்டப்படி குற்றம். இருப்பினும், தற்போது கூட ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் உரிமம் இல்லாமல் கார்களை ஓட்டுகிறார்கள். உங்கள் கார் விபத்துக்குள்ளான சமயத்தில், நீங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் உங்கள் கிளைமை நிராகரிக்கும்.
போலியாக கோரப்படும் கிளைம்
காப்பீட்டு பாலிசியை வாங்கும் போது, மக்கள் பிரீமியம் அதிகமாகக் கூடாது என்பதற்காக, கார் தொடர்பான முக்கியமான தகவல்களை மறைக்கிறார்கள். சிலர் போலியான கிளைம்களையும் செய்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளில், இந்த இரண்டு காரணங்களுக்காகவும் கிளைம் நிராகரிக்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்திற்கு போலி கிளைம் பற்றிய தகவல் கிடைத்தால் அது குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
ALSO READ | Bike Mileage Tips:உங்கள் பைக்கின் மைலேஜை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ!!
சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்துதல்
நீங்கள் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்தவில்லை என்றால், உங்கள் பாலிசி செல்லாது. இருப்பினும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் 90 நாட்கள் சலுகை காலத்தை வழங்குகின்றன. இந்த காலகட்டத்தில் பாலிசி புதுப்பிக்கப்படாவிட்டால், கார் காப்பீட்டிற்கான அனைத்து சலுகைகளையும் நீங்கள் இழப்பீர்கள்.
உள்ளூர் மெக்கானிக் மூலம் காரை சரிசெய்ய வேண்டாம்
வாகனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட டீலர் இல்லாமல், ஒரு உள்ளூர் மெக்கானிக் மூலம் வாகனத்தை பழுது பார்க்காமல் இருப்பது முக்கியம். பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்றைய காலகட்டத்தில், கணினிமயமாக்கப்பட்ட செயலிகளின் உதவியுடன் கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. எனவே, விபத்து அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கார் சேதமடைந்தால், அதை நீங்களே சரிசெய்யவோ அல்லது உள்ளூர் மெக்கானிக் மூலம் சர் செய்யவோ வேண்டாம். அவ்வாறு செய்தால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் கிளைமை நிராகரிக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR