தினம் ₹100 சேமித்தால் போதும்... கோடீஸ்வரனாகும் எளிய வழி இதோ!

நீங்கள் பணக்காரர் ஆக விரும்பினால், இதற்கு பெரிய முதலீடு எதுவும் தேவையில்லை. உங்கள் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரராவதை யாராலும் தடுக்க முடியாது. தினமும் 100 ரூபாய் சேமிப்பில் கூட எளிதில் பணக்காரர் ஆகலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2023, 01:25 PM IST
  • உங்கள் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்வதன் மூலம் கோடீஸ்வரராகலாம்
  • தினமும் ரூ.100 சேமித்து நல்ல நிதியை உருவாக்கலாம்.
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் 20 சதவீதம் வரை வருமானம் பெற்றுள்ளனர்.
தினம் ₹100 சேமித்தால் போதும்... கோடீஸ்வரனாகும் எளிய வழி இதோ! title=

வேலையில் இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி பணக்காரர் ஆக வேண்டும் என்பது தான் அனைவரின் கனவு. பல சமயங்களில் நன்றாகச் சம்பாதித்த பிறகும், பெரும்பாலானோரால் நன்றாகச் சேமிக்க முடிவதில்லை. இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் பணத்தை முறையாக முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரராவதை யாராலும் தடுக்க முடியாது. தினமும் 100 ரூபாயை மட்டும் சேமித்து நீங்கள் இலகுவாக கோடீஸ்வரராக மாறக்கூடிய நிபுணர்கள் பரிந்துரைக்கும் அத்தகைய முதலீட்டு முறைகளை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். ஏறக்குறைய நம்மில் எல்லோருக்கும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஏனெனில் பணத்தை சம்பாதித்தால் மட்டும் பத்தாது. அதனை சிறப்பாக சேமிப்பதோடு, பணத்தை இரட்டிப்பாகும் வகையில் சிறந்த முறையில் முதலீடு எப்படி செய்வது என்றும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும், தினசரி 100 ரூபாயை எளிதில் சேமிக்கலாம். பணக்காரர் ஆக பெரிய முதலீடு தேவையில்லை. வருமானம் கொஞ்சம் கூடினால் முதலீடு செய்யத் தொடங்குவோம் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆனால் பல நேரங்களில் அப்படிப்பட்டவர்கள் காத்திருந்து சேமிக்கும் வாய்ப்பினை கோட்டை விடுகிறார்கள். பணக்காரர் ஆவதற்கான வழிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Money Tips: ₹15,000 முதலீட்டில் நேந்திரம் பழ தூள் தயாரித்து ஆயிரங்களை அள்ளலாம்!

சேமிப்பை தொடங்கும் முறை

ஒவ்வொரு நாளும் ரூ.100 சேமிப்பதன் மூலம் ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம். இதற்கு சிறந்தது SIP. எஸ்ஐபி மூலம், வெறும் ரூ.100 சேமிப்பதன் மூலம் ரூ.1 கோடி நிதியைக் குவிக்கலாம். அதன் சூத்திரம் மிகவும் எளிமையானது. மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான வருமானத்தை அளித்துள்ளன. 20% வரை வருமானம் தந்த சில முசுவல் ஃபண்டுகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி இன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கிறார்கள். முறையான முதலீட்டுத் திட்டம் அதாவது SIP மூலம், தினமும் ரூ.100 முதலீட்டில் தொடங்க வேண்டும்.

100 ரூபாயைச் சேமிப்பதன் மூலம் 1 கோடி நிதியை உருவாக்கலாம்

தினமும் 100 ரூபாய் சேமித்தால், ஒரு மாதத்தில் 3 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். நீங்கள் இதை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, 20% வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், 21 ஆண்டுகளில் அதாவது 252 மாதங்களில், உங்கள் ஃபண்ட் ரூ.1,16,05,388 ஆக இருக்கும். அதேசமயம் இந்த நேரத்தில் நீங்கள் மொத்தம் ரூ.7,56,000 மட்டுமே டெபாசிட் செய்வீர்கள். 20%க்கு பதிலாக 15% வருமானம் கிடைத்தாலும் சுமார் ரூ.53 லட்சம் கிடைக்கும். நீங்கள் குறைந்த நேரத்தில் கோடீஸ்வரராக மாற விரும்பினால், உங்கள் முதலீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு

பரஸ்பர நிதியங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே, தகுந்த முதலீட்டு நிபுணர்களை கலந்து ஆலோசித்து, அவர்கள் பரிந்துரையின் படி, சிறந்த வருமானம் தரும் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வது சிறந்தது. மிகவும் பாதுகாப்பானது.

மேலும் படிக்க | அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ள SBI... இந்த முறை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News